Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மாத்தறையில் பாடசாலைக் கட்டடத்துக்கு தீ வைப்பு: இரண்டு மாடிகளும் எரிந்து நாசம்!

T

The Leader Desk

அக்டோபர் 16, 2024 • 2:27 PM

மாத்தறையில் பாடசாலைக் கட்டடத்துக்கு தீ வைப்பு: இரண்டு மாடிகளும் எரிந்து நாசம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலயத்துக்கு உட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டிடம் திடீர் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
  • நேற்று (15) மாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு அலறியபோது பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்த வந்தனர்.
  • ஆனால் அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
  • இக்கட்டடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்கள், 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள், நாற்காலிகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
எழுத்து அளவு:

வலயத்துக்கு உட்பட்ட தெலிஜ்ஜவில மத்திய மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடிக் கட்டிடம் திடீர் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

நேற்று (15) மாலை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கட்டிடம் தீப்பற்றி எரிவதை கண்டு அலறியபோது பிரதேசவாசிகள் மற்றும் மாலிம்பட பொலிஸார் தீயை கட்டுப்படுத்த வந்தனர்.
 
ஆனால் அதற்குள் கட்டிடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
 
பாடசாலை வளாகத்தில் இருந்த நாய் ஒன்றும் தீயில் சிக்கி இறந்தது.
 
இக்கட்டடத்தில் உள்ள விளையாட்டுப் பொருட்கள், 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மெத்தைகள், பாடசாலை மேசைகள், நாற்காலிகள், மின் உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
 
மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இன்று (16)  வந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
 
இதுவரை வெளியாகியுள்ள உண்மைகளின் பிரகாரம், இந்த கட்டிடத்திற்கு ஏதோ ஒரு குழுவினர் தீ வைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...