Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ர‌வூப் ஹ‌க்கீம் செய்த‌ துரோக‌த்துக்குப் பதிலடி வழங்கப்படும்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

T

The Leader Desk

அக்டோபர் 16, 2024 • 7:02 AM

ர‌வூப் ஹ‌க்கீம் செய்த‌ துரோக‌த்துக்குப் பதிலடி வழங்கப்படும்! - உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ந‌ன்றாக‌ தெரிந்தும் கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் ஏமாந்த‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
  • எவ‌ருக்கும் தெரியவில்லை.ஆனால் ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் மக்களின் ச‌மூக‌த்துரோகி என்றும் கிழ‌க்கு ம‌க்க‌ளை அவ‌ர் மாடுக‌ளாக‌ நினைத்து மேய்க்கின்றார் என‌வும் நாம் 2001ம் ஆண்டு முத‌ல் சொல்லி வ‌ருகிறோம்.
  • தேசிய‌ ப‌ட்டிய‌லில் ஹரீஸின் பெய‌ர் கூட‌ இல்லாத‌ நிலையில் அப்பாவி ம‌க்க‌ளை ரவூப் ஹ‌க்கீம் அப்ப‌ட்ட‌மாக‌ ஏமாற்ற முனைகிறார்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எழுத்து அளவு:
ந‌ன்றாக‌ தெரிந்தும் கூட  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் ஏமாந்த‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.
 
அவ‌ர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
 
பாராளுமன்ற தேர்த‌லில் ஹ‌ரீஸூக்கு  வேட்பு ம‌னுவில் இட‌ம் த‌ருவ‌தாக‌ ர‌வூப் ஹ‌க்கீம் கூறி அவ‌ரை க‌டைசி வ‌ரை இழுத்த‌டித்து வேட்பும‌னு இறுதித் தின‌மான‌ 11 ஆம் திகதி  புனாணை  பகுதியில் உள்ள பிரத்தியேக இடம் ஒன்றில் ஒப்ப‌மிட‌ வ‌ருமாறு கூறி இறுதி நேர‌த்தில் அவ‌ரை ஏமாற்றிய‌மை எச.எம்.எம். ஹ‌ரீஸூக்கு வாக்க‌ளித்த‌  ம‌க்க‌ளுக்கு ர‌வூப் ஹ‌க்கீம் செய்த‌ துரோக‌ங்க‌ளில்   ஒன்றாகும்.
 
எம்மைப் பொறுத்த‌வ‌ரை ஹ‌ரீஸின்  அர‌சிய‌ல் செயற்பாட்டில்   அதிருப்தி இருந்தாலும் ம‌க்க‌ள் வாக்குக‌ள் பெற்ற‌ ஒருவ‌ரை இவ்வாறு கேவ‌ல‌ப்ப‌டுத்திய‌தை ஏற்றுக்கொள்ள‌ முடியாது.
 
நாம் இந்த‌ ச‌மூக‌த்துக்கு எவ்வ‌ள‌வோ  கூறினோம். ர‌வூப் ஹ‌க்கீம் த‌லைமையிலான‌ முஸ்லிம் காங்கிர‌ஸை ஒதுக்கிவிட்டு க‌ல்முனை தொகுதி ம‌க்க‌ள் த‌லைமையில் புதிய‌ அர‌சிய‌ல் பாதை அமைப்போம் என வலியுறுத்தி வந்திருந்தோம்.
 
இந்த‌ தூர‌நோக்கு  ஹ‌ரீஸூக்கும் புரிய‌வில்லை. எவ‌ருக்கும் தெரியவில்லை.ஆனால் ரவூப் ஹ‌க்கீம் முஸ்லிம் மக்களின்   ச‌மூக‌த்துரோகி என்றும் கிழ‌க்கு ம‌க்க‌ளை அவ‌ர் மாடுக‌ளாக‌ நினைத்து மேய்க்கின்றார் என‌வும் நாம் 2001ம் ஆண்டு முத‌ல் சொல்லி வ‌ருகிறோம்.
 
 இப்போது ஹ‌ரீஸூம்  முஸ்லிம் காங்கிர‌ஸ் போராளிக‌ளும்  க‌ல்முனைச் ச‌மூக‌மும் ஏமாளிக‌ளாக‌  வெட்கித்து நிற்கின்ற‌ன‌ர்.இவ்வ‌ள‌வும் செய்த‌ ஹ‌க்கீம் இப்போது ஹ‌ரீஸையும் க‌ல்முனையையும் மீண்டும் ஏமாற்ற‌  ஹ‌ரீஸுக்கு தேசிய‌ ப‌ட்டிய‌லில் இட‌ம் கொடுக்க‌விருப்ப‌தாக‌ கூறுகிறார்.
 
தேசிய‌ ப‌ட்டிய‌லில் ஹரீஸின்  பெய‌ர் கூட‌ இல்லாத‌ நிலையில் அப்பாவி ம‌க்க‌ளை ரவூப் ஹ‌க்கீம் அப்ப‌ட்ட‌மாக‌ ஏமாற்ற முனைகிறார்.இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
 
ஹ‌ரீஸ்   முஸ்லிம் காங்கிரஸின் பிர‌தித் த‌லைவ‌ர் என இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் கூற‌ப்ப‌ட்ட‌து. ஆனால் இன்ன‌மும் தேர்த‌ல் திணைக்க‌ள‌ இணையத்தில் முஸ்லிம் காங்கிர‌ஸின் நிர்வாக‌த்தில் ஹ‌ரீஸ் இல்லை.
 
 இதைக்கூட‌   செய‌லாள‌ரும் த‌லைவ‌ரும் தேர்த‌ல் திணைக்க‌ள‌த்துக்கு அறிவிக்காம‌ல் ஹ‌ரீஸை ஏமாற்றியுள்ள‌ நிலையில், இல்லாத‌ தேசிய‌ப்ப‌ட்டிய‌லை வ‌ழ‌ங்குவ‌து  என‌ சொல்வ‌த‌ன் மூல‌ம் ர‌வூப் ஹ‌க்கீம் எம‌து ம‌க்க‌ளை த‌லையாட்டிகளாக நினைக்கிறாரா என‌ கேட்கிறோம்.
 
எனவே, ஹ‌ரீஸ்  க‌ல்முனை தேர்த‌ல் தொகுதியை மைய‌மாக‌ கொண்ட‌  'ஐக்கிய‌ முஸ்லிம் காங்கிர‌ஸ்'  என்ற‌ பெய‌ரில் க‌ட்சியை  பிர‌க‌ட‌ன‌ப்ப‌டுத்த‌ துணிச்ச‌லுட‌ன் முன்வ‌ர‌ வேண்டும்.
 
 
அத‌ன் பெய‌ரில்  க‌ல்முனையில் மேடை போட்டு ஹ‌க்கீமுக்கோ அவ‌ர் க‌ட்சிக்கோ ம‌க்க‌ள் வாக்களிக்க வேண்டாம் என‌ ம‌க்க‌ளுக்கு பிர‌சார‌ம் செய்ய‌ முடியும்.
 
அத‌ன் மூல‌ம்  இதோ க‌ல்முனை ம‌க்க‌ள் விழித்துவிட்டார்க‌ள் என்றும்  ஹ‌க்கீமுக்கு எதிராக‌ புதிய‌ க‌ட்சியை பிர‌க‌ட‌னப்ப‌டுத்தி விட்டார்க‌ள் என்ற‌ செய்தியும் தான் ஹ‌க்கீமின் துரோக‌ங்க‌ளுக்கு அவ‌ர் த‌லையில் விழும் இடியாகும்.
 
இத‌ற்கான‌ முய‌ற்சிக‌ளை ஹ‌ரீஸ் முன்னெடுத்தால் எம்மால் முடிந்த‌ அனைத்து உத‌விக‌ளையும் செய்ய‌ உல‌மா க‌ட்சி த‌யாராக‌ உள்ள‌து என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...