Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவையும் யுவதியையும் தாக்கியவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!

T

The Leader Desk

அக்டோபர் 16, 2024 • 5:50 AM

சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவையும் யுவதியையும் தாக்கியவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவையும் யுவதி ஒருவரையும் தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • இவருடன் யுவதி ஒருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இதன்போது, உணவகம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவெல பதில் நீதவான் சந்தியா தல்துவ தலங்கம பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்னவையும் யுவதி ஒருவரையும் தலவத்துகொட பிரதேசத்தில் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, உணவகம் ஒன்றில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர்களை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவெல பதில் நீதவான் சந்தியா தல்துவ தலங்கம பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன ஜே.வி.பி.யின் அரசியல் குழுவில் பணியாற்றிய காலப் பகுதியில், தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில், தாக்குதலுக்கு உள்ளானார். இவருடன் யுவதி ஒருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான தசுன் சில்வா மற்றும் சஜித் குணசேகர ஆகியோர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான எமது கட்சிக்காரரான சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன ஜனதா விமுக்தி பெரமுனவின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர்.

ஜே.வி.பி.யை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளராக செயற்பட்டார் என் அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...