Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

புல்மோட்டை பெண்ணின் ஜனாஸா அடக்கத்துக்கு இடையூறு விளைவித்த பொலிஸார்!

T

The Leader Desk

அக்டோபர் 15, 2024 • 7:39 AM

புல்மோட்டை பெண்ணின் ஜனாஸா அடக்கத்துக்கு  இடையூறு விளைவித்த பொலிஸார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவலை நம்பிய பொலிஸார், முஸ்லிம் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
  • திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புல்மோட்டை பொன்மலைக்குடா கிராம மக்கள் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி காலை பொன்மலைக்குடாவில் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.
  • குறித்த காணி தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமானது குறித்த தேரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தாம் வந்ததாகவும் பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

தகவலை நம்பிய பொலிஸார்,  முஸ்லிம் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட புல்மோட்டை பொன்மலைக்குடா கிராம மக்கள் கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி காலை பொன்மலைக்குடாவில் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்காக குழி தோண்டிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, குச்சவெளி பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு சென்று இந்தக் காணி தொல்லியல் துறைக்குச் சொந்தமான காணி என்பதால் இங்கு அடக்கம் செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி தொல்லியல்  திணைக்களத்துக்குச் சொந்தமானது குறித்த தேரர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் தாம் வந்ததாகவும் பொலிஸார் மக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இந்தக் காணி முஸ்லிம்களின் மையவாடி என பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்த அப்பகுதி முஸ்லிம்கள், எத்தனை தடைகள் வந்தாலும்  இஸ்லாமிய முறைப்படி அந்த இடத்தில் உடலை  அடக்கம் செய்வோம் என அனைவரும் ஒன்றிணைந்து தெரிவித்தனர்.

இந்நிலையில், உடலை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு மாகாண செயலாளரின் அறிவித்தலை அடுத்து பொலிஸார் அங்கிருந்து சென்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...