Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முஷாரபுடன் இணைந்து பொத்துவில் அப்துல் வாசித் பயணிக்கிறாரா?

T

The Leader Desk

அக்டோபர் 14, 2024 • 3:00 PM

முஷாரபுடன்  இணைந்து பொத்துவில் அப்துல் வாசித் பயணிக்கிறாரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ்.
  • இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளன என்பதைப் பற்றி அவருக்கு மிகத் தெளிவாக தெளிபடுத்தியுள்ளேன்.
  • அப்துல் வாசித் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரபோடு இணைந்து பயணிப்பதாக 

பரப்பப்பட்டு வரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான எம்.எஸ். அப்துல் வாசித் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரபின் வெற்றி வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன.

அதனால், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்காக அவரின் ஆதரவை வழங்குமாறு கூறியிருந்தேனே தவிர, தேர்தலிலிருந்து விலகி

விட்டுக் கொடுப்பதாகவோ அல்லது முஷாரப்போடு இணைந்து பயனிப்பதாகவோ ஒருபோதும் நான் கூறவில்லை.

இம்முறை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளன என்பதைப் பற்றி அவருக்கு மிகத் தெளிவாக தெளிபடுத்தியுள்ளேன்.

அது மாத்திரமல்லாது கட்சித் தலைமையினால் எங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் பற்றியும் தெளிவுபடுத்தினேன். 

இம்முறை நாடாளுமன்றம் செல்வதற்கான சகல வாய்ப்புக்களும் எனக்குள்ளன. அதற்கான ஆதரவுகளை முழுமையாக வழங்குவதற்கு பொத்துவில் மக்கள் தொகுதி மக்களும் முன்னின்று செயற்படுகின்றனர்.

இதை சகித்துக்கொள்ள முடியாத சிலரினால் இவ்வாறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை எவரும் நம்ப வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட பொத்துவில் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.அப்துல் வாசித் ஆதரவாளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...