Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய!

T

The Leader Desk

அக்டோபர் 13, 2024 • 12:25 PM

தீவிர அரசியலிலிருத்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கெஹலிய!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
  • கண்டியில் இன்று (13) நடைபெற்ற தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
  • மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
  • "சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தற்செயலாக அரசியல்வாதியானேன்.
எழுத்து அளவு:

உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.

கண்டியில் இன்று (13) நடைபெற்ற தனது அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சி உறுப்பினர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
 
இங்கு அவர் மேலும் கூறுகையில், தான் அரசியல் அனாதை இல்லை. அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் மக்களின் ஆதரவு அப்படியே உள்ளது என்றார்.
 
ஒரு தொழிலதிபராக சம்பாதிக்கும் பணத்தை விட அரசியலில் ஈடுபட்டு பெறப்படும் மக்களின் அன்பு மதிப்புமிக்கது என்று அவர் வலியுறுத்தினார்.
 
மேலும், நீதிமன்றத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், நிரபராதியாக அரசியலுக்கு வருவேன் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
 
"சுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, நான் தற்செயலாக அரசியல்வாதியானேன். எனது தாத்தா பண்டாரநாயக்காவின் செனட்டில் இருந்தார்.  பண்டாரநாயக்கா என்னை கெஹலிய என்று அழைத்தார். எனக்கு தீவிர அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை. நான் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர்".
 
"அரசியல் செய்கிறோமோ இல்லையோ, உங்களுக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தயக்கமின்றி என்னுடன் பேசுங்கள், நான் இருக்கிறேன். இது வெற்று வார்த்தைகளால் சொல்லப்பட்ட ஒன்றல்ல, இது இதயத்திலிருந்து கூறப்பட்டது".  
 
கெஹலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் சுற்றாடல் அமைச்சர் உட்பட பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...