Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கல்முனைக் கட்சி காசுக்கு விற்கப்பட்டதா? முன்னாள் எம்பி ஹாரிஸ் புரோக்கரா?

T

The Leader Desk

அக்டோபர் 13, 2024 • 9:21 AM

கல்முனைக் கட்சி காசுக்கு விற்கப்பட்டதா? முன்னாள் எம்பி ஹாரிஸ் புரோக்கரா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விற்ற‌தாக‌ கூறப்படுவ‌து சோடிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌த‌ந்தி என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் அவைத் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.
  • நானும் ஹ‌ரீஸும் நேர‌டியாக‌ பேசி ஒரு வ‌ருட‌த்துக்கு மேலாகிவிட்ட‌து.
  • அத்துட‌ன் என‌க்கும் ஹ‌ரீஸுக்கும் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் 7 ஆம் பொருத்த‌ம்.
எழுத்து அளவு:

விற்ற‌தாக‌ கூறப்படுவ‌து சோடிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌த‌ந்தி என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் அவைத் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.

இது ப‌ற்றி அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து,
 
ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி எனும் பெய‌ரில் இய‌ங்கி வ‌ந்த‌ எம‌து க‌ட்சியை நாம் ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்கவுக்கு சில‌ கோடி ரூபாவுக்கு விற்ற‌தாக‌ சிலர் கூறுகின்றனர்.
 
ஒரு வீட்டை விற்றால் அந்த‌ வீட்டின் சொந்த‌க்கார‌ன் அதில் குடியிருக்க‌ முடியுமா? என்ப‌து கூட‌ புரியாத‌ கூழ் முட்டைக‌ள். எம‌து  க‌ட்சியில் நான்  அவைத் த‌லைவ‌ராக‌ (Chairman) உள்ளேன் என்பதனை அறிவார்களா?
 
எம‌து க‌ட்சியின் த‌லைமை ஏற்கும்ப‌டி நான் ஹிஸ்புல்லாவிட‌ம் சொன்னேன். அதே போல் முன்னாள் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ரான‌ ஹ‌ரீஸ், முஷ‌ர்ர‌பையும் த‌லைவ‌ர் ப‌த‌வியை ஏற்க‌ அழைத்தேன். அவ‌ர்க‌ள் அல‌ட்சிய‌ம் செய்த‌ன‌ர்.
 
இந்த‌ நிலையில் எம‌து க‌ட்சியை முன்கொண்டு செல்ல‌ அர‌சிய‌ல் அறிவும் பாராளும‌ன்ற‌ அனுப‌வ‌மும் உள்ள‌ ஒருவ‌ர் கிடைத்த‌போது அவ‌ரை க‌ட்சியின் த‌லைவ‌ராக்கியுள்ளோம். 
 
அத்துட‌ன் க‌ட்சியை விற்ற‌மைக்கு க‌ல்முனையை சேர்ந்த‌ ஒரு பிர‌ப‌ல‌ அர‌சிய‌ல்வாதி புரோக்க‌ர் என‌ இந்த‌ கூழ் முட்டைக‌ள் நொந்துபோய் கிட‌க்கும் ஹ‌ரீஸை ம‌றைமுக‌மாக‌ குற்ற‌ம் சாட்டியுள்ள‌ன‌ர்.
 
நானும் ஹ‌ரீஸும் நேர‌டியாக‌ பேசி ஒரு வ‌ருட‌த்துக்கு மேலாகிவிட்ட‌து. அத்துட‌ன் என‌க்கும் ஹ‌ரீஸுக்கும் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ளில் 7 ஆம் பொருத்த‌ம். பாவ‌ம் அவ‌ரையும் இழுத்துவிட்டிருப்ப‌து அநியாய‌மாகும்.
 
இத்த‌கைய‌ வ‌த‌ந்திக‌ளுக்கு கார‌ண‌ம் என‌து க‌ட்சியின் பிர‌தித் த‌லைவ‌ராக‌ இருந்த‌ ஒருவ‌ர் தான்தான் க‌ட்சித்த‌லைவ‌ன் என‌ பேஸ்புக்குக‌ளில் பொய்யாக‌ எழுதிய‌போது அவ‌ருக்கெதிராக‌ நான் ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌போது அவ‌ர் என்னைப் ப‌ற்றி இவ்வாறாக‌ க‌ட்சியை விற்ற‌தாக‌ பொய்யாக‌ பேஸ்புக்குக‌ளில் எழுதினார். அந்த‌ வாந்தியைத்தான் இந்த‌ கூழ் முட்டைக‌ள் விழுங்கியுள்ள‌ன‌ர்.
 
463008214 10161862103100185 500632451292845091 n
 
த‌ற்போது எம‌து க‌ட்சியின் த‌லைவ‌ராக‌ முன்னாள் பாராளுன்ற‌ உறுப்பின‌ர் ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். அவ‌ர் க‌ட்சியை ந‌ன்றாக‌ செய‌ற்ப‌டுத்துகிறார்.
 
அத்துட‌ன் க‌ட்சியை அனைத்து இன‌ ம‌க்க‌ளிட‌மும் கொண்டு செல்வத‌ற்காக‌ புதிய‌ சின்ன‌மாக‌ மைக் சின்ன‌த்தை கொண்டு வ‌ந்துள்ளோம்.
 
இத்தேர்த‌லில் எம‌து ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சிக்கு நிச்ச‌ய‌ம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ப‌த‌வி கிடைக்கும் என்ற‌ ந‌ம்பிக்கை உள்ள‌து.
 
எம‌து க‌ட்சி இம்முறை
கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, பொலன்னறுவை, புத்தளம் ஆகிய‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் க‌ட்சியின் மைக் சின்ன‌த்திலும் ஏனைய‌ மாவ‌ட்ட‌ங்க‌ளில் வேறு க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌ணியாக‌வும் போட்டியிடுகிற‌து.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...