Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல வேட்புமனு பட்டியலில் முன்னாள் எம்பி ஹாரிஸ் உள்வாங்கப்படாதது ஏன்?

T

The Leader Desk

அக்டோபர் 13, 2024 • 8:34 AM

 முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல வேட்புமனு பட்டியலில் முன்னாள் எம்பி ஹாரிஸ் உள்வாங்கப்படாதது  ஏன்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிசாம் காரியப்பர், ஹாரிஸின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவரிடம் விளக்கம் கோரியபோது, தான் சுகயீனமடைந்ததால் பிரசாரப் பணிகளில் ஈடுபட முடியாது போனதாக அறிவித்திருத்தார்.
  • இந்நிலையில், கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியில் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் இவரின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்ப்பும் அதிருப்தியும் வலுவாக எழுந்தன.
  • ஆனால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை.
எழுத்து அளவு:

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹாரிஸின் கடந்தகால நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான  பிரசாரப் பணிகளில் ஈடுபடாமை காரணமாகவே அவருக்கு இம்முறை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பர்  வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்து கருத்துத் தெரிவித்த  நிசாம் காரியப்பர், ஹாரிஸின் நடவடிக்கைகள் தொடர்பில் கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவரிடம் விளக்கம் கோரியபோது, தான் சுகயீனமடைந்ததால் பிரசாரப் பணிகளில் ஈடுபட முடியாது போனதாக அறிவித்திருத்தார். ஆனால் இது ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக அமையவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆதரிப்பதற்கு கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே ஆதரிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் காணப்பட்டார்.

IMG 20241013 135349 800 x 533 pixel

இருப்பினும் பின்னர் கட்சியின் தீர்மானத்துக்கு அமைவாக தான் செயற்படுவதாக எமது தலைமைக்கு அவர் அறிவித்திருந்தார்.

 இந்நிலையில், கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியில் உள்ள கட்சி ஆதரவாளர்கள் மத்தியிலும் இவரின் கடந்தகால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்ப்பும் அதிருப்தியும் வலுவாக எழுந்தன.

கட்சியின் முக்கியஸ்தர்களில் எவரேனும் இவ்வாறு  நடந்து கொண்டாலும் கட்சித் தலைமை  நடவடிக்கை எடுப்பதில்லை. மன்னித்து விடும் என்ற தவறான கருத்துக்களும் மேலோங்கி நின்றன.

மேலும், தற்போது கையளிக்கப்பட்டுள்ள வேட்புமனுவில் கையெழுத்திட்டவர்களில் நால்வர், முன்னாள் எம்.பி ஹாரிஸை வேட்புமனுவுக்குள் உள்வாங்கினால் தாங்கள் ஒப்பமிடுவதிலிருந்து தவிர்ந்து வெளியேறுவோம் என  கட்சித் தலைமைக்கு அழுத்தமாகத்  தெரிவித்தனர்.

இந்த விடயத்தில் கட்சியின் தலவைர் ரவூப் ஹக்கீம் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டபோதும் அது கைகூடாததால் ஹாரிஸை வேட்புப் பட்டியலில் உள்ளீர்க்க முடியாத  நிலைமை ஏற்பட்டது என்றும் நிசாம் காரியப்பர் மேலும் தெரிவித்தார்.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...