Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உடனடி இடமாற்றம்!

T

The Leader Desk

அக்டோபர் 13, 2024 • 4:52 AM

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக் கொலைப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உடனடி இடமாற்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மனிதக் கொலைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • அத்துடன், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
  • இதன்படி, நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்து தம்மை கைது செய்யும் முயற்சி தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
எழுத்து அளவு:

மனிதக் கொலைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்துக சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன உள்ளிட்ட சிலருக்கு எதிராக பி அறிக்கை தாக்கல் செய்ய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் பெண்ணொருவரின் பின்பகுதி வீடியோ பதிவு தொடர்பில் பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு விசாரணைகள் காரணமாகவே அவருக்கு இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
கடந்த வாரம் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக, இணையத்தள பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சில பிழைகளை மேற்கோள் காட்டி இந்துக சில்வா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அத்துடன், அந்த அறிக்கைகளின் அடிப்படையில் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.
 
இதன்படி, நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்து தம்மை கைது செய்யும் முயற்சி தொடர்பில் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நேற்று (11) முறைப்பாடு செய்துள்ளார்.
 
எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்தாலோசிக்காமல் தரிந்து ஜயவர்தனவுக்கு எதிராக சில விடயங்களை தெரிவித்து இந்துல சில்வா நீதிவான் நீதிமன்றில் உத்தரவு  ஒன்றைக் கோரியுள்ளதாக பின்னர் தெரியவந்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...