Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்துக்கான வேட்புமனுக்கள் கையளிப்பு! (வீடியோ)

T

The Leader Desk

அக்டோபர் 10, 2024 • 8:21 AM

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்துக்கான வேட்புமனுக்கள் கையளிப்பு! (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்துக்கான வேட்புமனுக்களை கையளித்தோம்.
  • அத்துடன் ஜனாதிபதியுடன் இணைந்து, நாட்டின் நலனுக்காக 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நாட்டுக்காக ஆற்ற வேண்டிய சிறந்த பங்களிப்பை வழங்குவோம்.
  • இது அனைவரினதும் பொறுப்பு என்பதனால், 220 இலட்சம் மக்களும் ஒன்றாய் இதற்காக உழைக்க வேண்டும்.
  • எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிகளவான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவோம் என்று எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எழுத்து அளவு:

ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம் இன்றைய தினம் கொழும்பு மாவட்டத்துக்கான வேட்புமனுக்களை கையளித்தோம். இத்தேர்தலில் மக்கள் வழங்கும் ஆசிர்வாதங்களின் அடிப்படையில் வெற்றி பெற்று, நல்லதொரு நாட்டை, நல்லதொரு தாய்நாட்டைக் கட்டியெழுப்ப, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான யுகத்திற்கு வழிவகுப்போம். ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் மையமாகக் கொண்டு ஒன்றாய் இணைந்து புதிய யுகத்தை உதயமாக்குவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அத்துடன்  ஜனாதிபதியுடன் இணைந்து, நாட்டின் நலனுக்காக 220 இலட்சம் மக்களின் நலனுக்காக நாட்டுக்காக ஆற்ற வேண்டிய சிறந்த பங்களிப்பை வழங்குவோம். இதுவரை இருந்து வந்த நாகரிகமற்ற அரசியல் கலாசாரத்தை புறந்தள்ளிவிட்டு சகோதரத்துவத்துடனும் ஒருநிலைப்பட்டும் செயற்படுவோம்.
 
IMG 20241010 WA0117
 
2028 க்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதால், சுருங்கிப்போயுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இது அனைவரினதும் பொறுப்பு என்பதனால், 220 இலட்சம் மக்களும் ஒன்றாய் இதற்காக உழைக்க வேண்டும். இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்குவதாகும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான, ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. 
 
இதன் பிரகாரம், நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள கொழும்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரால் குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. 
 
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
வேட்பாளர் தெரிவில் கடும் போட்டி காணப்பட்டது. பெண்களுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதிகளவான பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுத் தருவோம் என்று எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
அரசியலில் அல்லது வேறு எந்தத் தொழிலிலும் பணிபுரிபவர்கள் அனைவரும் தங்கள் சேவையை முடித்துக் கொள்ள வேண்டிய காலம் வரும். மக்களின் ஆசீர்வாதத்திற்கும் விருப்புக்கும் உட்பட்டு செயற்படுவதே இறுதியில் முக்கியமானது என ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்துக்கான வேட்புமனுக்கள் கையளிப்பு! (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation