Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

சிறுவன் ஹம்தி மரணம்: டாக்டரை சந்தேக நபராக பெயரிட்டு கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்!

T

The Leader Desk

அக்டோபர் 10, 2024 • 4:29 AM

சிறுவன் ஹம்தி மரணம்: டாக்டரை  சந்தேக நபராக பெயரிட்டு கைது செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணரை சந்தேக நபராகப் பெயரிட்டு உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று (09) உத்தரவிட்டுள்ளார்.
  • லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர சிறுமி ஒருவர் உயிரிழந்த விடயத்தில் குற்றம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
  • பிரேத பரிசோதனை மருத்துவரின் சாட்சியங்களை ஆராய்வதற்காக நேற்று முறைப்பாடு கோரப்பட்டது.
எழுத்து அளவு:

மேற்கொண்ட விசேட வைத்திய நிபுணரை சந்தேக நபராகப் பெயரிட்டு உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று (09) உத்தரவிட்டுள்ளார்.

லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் சிறுநீரக அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர சிறுமி  ஒருவர் உயிரிழந்த  விடயத்தில் குற்றம் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
 
சிறுமியின் பிரேத பரிசோதனை விசாரணையில் சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள சத்திர சிகிச்சை நிபுணர் நவின் விஜேகோன், சாட்சியமளிப் பதனைத் தவிர்த்து வெளிநாட்டில் வாழ்வதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த உண்மைகளைப் பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
 
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோரின்  இரண்டு வயதுடைய ஹம்தி என்ற சிறுவன் டிசம்பர் 22ஆம் திகதி சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாதங்களின் பின்னர் வலது சிறுநீரகம் இன்றி உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
 
பிரேத பரிசோதனை மருத்துவரின் சாட்சியங்களை ஆராய்வதற்காக நேற்று முறைப்பாடு கோரப்பட்டது.
 
சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு பொறுப்பான நிபுணத்துவ சத்திரசிகிச்சை நிபுணர் நவீன் விஜயகோனின் சாட்சியம் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக அழைக்கப்படவிருந்த போதிலும், அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் அவர் இது தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். 
 
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உண்மைகளை முன்வைத்து சாட்சியமாக குறிப்பிடப்பட்டுள்ள நிபுணத்துவ வைத்தியர் சாட்சியமளிப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரிகிறது
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...