Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மருந்துக் கொள்வனவுக்கான பிரதமர் ஹரிணியின் முன்மொழிவு அமைச்சரவையால் மீண்டும் நிராகரிப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2024 • 5:41 AM

மருந்துக் கொள்வனவுக்கான பிரதமர் ஹரிணியின் முன்மொழிவு அமைச்சரவையால் மீண்டும் நிராகரிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மருந்துகளை உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்த மகஜர் இரண்டாவது தடவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
  • ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (08) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றபோது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.
  • புதிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதிலும் எட்டு சதவீத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

மருந்துகளை உள்ளுர் மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சரவையில் சமர்ப்பித்த மகஜர் இரண்டாவது தடவையாக நிராகரிக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுர திஸாநாயக்க தலைமையில் நேற்று முன்தினம் (08) அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றபோது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்துகளுக்கு இதுவரை உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்ட முறைகளை மாற்றி புதிய முறையின் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

புதிய வேலைத்திட்டத்தின் கீழ், உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களிடமிருந்து மருந்துகளை கொள்வனவு செய்வதிலும் எட்டு சதவீத விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வருடத்துக்கு தேவையான மருந்துகளை வழங்குமாறு உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு இதுவரை மொத்தமாக ஓடர்களை வழங்காத காரணத்தினால் ஜனவரி மாதத்துக்குள் மருந்துகளை விநியோகிக்க முடியாது என உற்பத்தியாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர். மருந்து உற்பத்திக்கு மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதே இதற்குக் காரணம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...