Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுர அரசின் அதிரடி வேட்டை ஆரம்பம்; பண்டோராவை நோக்கி பாயும் விசாரணைகள்!

T

The Leader Desk

அக்டோபர் 8, 2024 • 4:27 AM

அநுர அரசின் அதிரடி வேட்டை ஆரம்பம்; பண்டோராவை நோக்கி பாயும் விசாரணைகள்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பில்லியன் கணக்கான டொலர்கள், சொத்துக்களை சம்பாதித்ததாகக் கூறப்படும் பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
  • சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட சிறப்புத் தகவலின்படி, பண்டோரா கோப்புகளில் வரி ஏய்ப்பு மற்றும் மோசடி தொடர்பான 11.9 மில்லியன் நிதிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.
  • கடந்த அக்டோபர் 3, 2021 அன்று, புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒன்றியம் இந்த 'பண்டோரா ஆவணங்களை' வெளியிட்டது.
  • அந்த விசாரணைக்காக 117 நாடுகளில் இருந்து 600 ஊடகவியலாளர்கள் கூடியிருந்தனர்.
எழுத்து அளவு:

பில்லியன் கணக்கான டொலர்கள், சொத்துக்களை சம்பாதித்ததாகக் கூறப்படும் பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்களின் பெயர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்ளும் என பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள இந்நாட்டு பிரஜைகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த விசாரணைகள் வலுவாக முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வரி ஏய்ப்பு செய்யும் இலங்கை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் விசேட விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திருமதி செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி விசாரணைகள. ஏற்கனவே ஆரம்பிக ப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) வெளியிட்ட சிறப்புத் தகவலின்படி, பண்டோரா கோப்புகளில் வரி ஏய்ப்பு மற்றும் மோசடி தொடர்பான 11.9 மில்லியன் நிதிப் பதிவுகள் வெளியாகியுள்ளன.

வரி ஏய்ப்பு மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களில் இலங்கையர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கடந்த அக்டோபர் 3, 2021 அன்று, புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேச ஒன்றியம் இந்த 'பண்டோரா ஆவணங்களை' வெளியிட்டது.

அந்த விசாரணைக்காக 117 நாடுகளில் இருந்து 600 ஊடகவியலாளர்கள் கூடியிருந்தனர்.

சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி ஊடகங்களுக்கு அறிவித்தார், சர்வதேசம் வெளியிட்டுள்ள பண்டோரா ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, பண்டோரா ஆவணங்களில் உள்ள இலங்கையர்களின் வரிப்பணம் செலுத்தியமை தொடர்பான கோப்புகள் மற்றும் வரி ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்திருந்தது.

இது தொடர்பான அறிக்கைகள் நீதிமன்றத்தால் கோரப்பட்டால், உள்நாட்டு வருமான வரித் திணைக்களம் அவற்றை வழங்குவதற்குக் கடமைப்பட்டிருப்பதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்திருந்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...