Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும்! - சஜித்

T

The Leader Desk

அக்டோபர் 7, 2024 • 1:45 PM

நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும்! - சஜித்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பணவீக்கம் குறைந்து, ​​அழுத்தம் குறைந்து பொருளாதாரம் வலுப்பெறும்.
  • ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்தினால் போதும் என சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து அதனை செலுத்துவதாக முன்னாள் அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்ததால் 2028 முதல் இந்த கடனை செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.
  • நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சார்பாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 100 மில்லியன் டொலர்களை மானியமாக பெற்றுக் கொடுத்தோம்.
  • ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

பணவீக்கம் குறைந்து, ​​அழுத்தம் குறைந்து பொருளாதாரம் வலுப்பெறும். இவ்வாறான பொருளாதார வளர்ச்சி துரிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 2033 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்தினால் போதும் என சர்வதேச நாணய நிதியம் கூறினாலும், 2028 ஆம் ஆண்டிலிருந்து அதனை செலுத்துவதாக முன்னாள் அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்ததால் 2028 முதல் இந்த கடனை செலுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது.

அப்போதைய அரசாங்கம் இவ்வாறானதொரு முட்டாள்தனமான முடிவை எடுத்து பொருளாதாரத்தை சுருக்கியுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்ததுடன், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினர் கூட வீழ்ச்சியடைந்துள்ளனர் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சார்பாக உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் பிரதிநிதிகளை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்து ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் 100 மில்லியன் டொலர்களை மானியமாக பெற்றுக் கொடுத்தோம். இந்த நாட்டை யார் ஆட்சி செய்தாலும் நாடு மீள வேண்டுமாயின், மக்கள் மீண்டு வர வேண்டுமாயின் பொருளாதாரம் அபிவிருத்தியடை வேண்டும் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஒருவரால் செய்ய முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணித்தோடு இதைச் செய்ய வேண்டும். ஒரு நாடாக நாம் இந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி நாட்டை முன்னிலைப்படுத்தியே செயற்பட்டு வருகிறது. பொருளாதாரம் வலுவடைந்து, பொருளாதார செயல்முறைகள் வலுப் பெற்று, பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றும் 4 ஆண்டுகளில் கடனை அடைக்க வேண்டும் என்பதால், இதில் கவனம் செலுத்தி, இந்தக் கடன் செலுத்தும் இடைவெளியில் ஆண்டுதோறும் கடனை செலுத்தும் அளவுக்கு அந்நியச் செலாவணி கையிருப்பு நாட்டில் இருக்க வேண்டும். இதற்கான ஒரே திட்டம் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு உருவாக்கம், அன்னிய நேரடி முதலீட்டை வலுப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் தொழில் திட்டத்தை நாடுவது மட்டுமே என்று சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாடும் மக்களும் மீண்டு வருவதற்கு பொருளாதாரம் அபிவிருத்தி காண வேண்டும்! - சஜித் | Tamil Leader | We Lead the Nation