Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்!

T

The Leader Desk

அக்டோபர் 4, 2024 • 5:11 AM

குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
  • தற்போது எவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன, எவ்வாறான விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அவை நிறுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் முக்கியமான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

செயலாளர் ரவி செனவிரத்ன தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (3) விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தேசிய மட்ட குற்றங்கள், மோசடிகள் மற்றும் முக்கியமான குற்றச் செயல்கள் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விசாரணைகளின் முன்னேற்றத்தை அறிந்து கொள்வதற்காக இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் உயர் அதிகாரிகள் குழு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதற்காக இணைந்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
தற்போது எவ்வாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன, எவ்வாறான விசாரணைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன, அவை நிறுத்தப்படுவதற்கு அரசியல் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, அநாவசியமாக பிற்போடப்பட்ட விசாரணைகள் குறித்தும், புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய விசாரணைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
விசாரணைகள் தாமதமானால் அது என்னவாக இருக்கும் என்பது குறித்தும் கலந்தாலோசித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
 
பல முக்கிய விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கலந்துரையாடல் தொடர்பான விடயங்கள் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்! | Tamil Leader | We Lead the Nation