Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல் பயணமாக இந்தியா செல்லும் அநுரகுமார பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார்!

T

The Leader Desk

அக்டோபர் 4, 2024 • 4:51 AM

ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் முதல்  பயணமாக இந்தியா செல்லும் அநுரகுமார பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவின் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • இன்று (04) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இது தொடர்பான அழைப்பை விடுப்பார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட பிரமுகர் என இந்திய வெளிவிவகார அமைச்சரை அறிமுகப்படுத்த முடியும்.
  • இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:

தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியாவின் புதுடில்லிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (04) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இது தொடர்பான அழைப்பை விடுப்பார் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்வார் என்றும், அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் உறவுகள் தொடர்பில் கலந்துரையாடுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதன் பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் உயர்மட்ட பிரமுகர் என இந்திய வெளிவிவகார அமைச்சரை அறிமுகப்படுத்த முடியும்.

இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இன்று வருகை தரும் கலாநிதி சுப்ரமணியம் ஜயசங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினர், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சர் ஜெயசங்கருடன், இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும் இந்த விஜயத்தில் இணைந்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...