Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

யுக்திய நடவடிக்கையின்போது வழக்கறிஞரின் சாரதிக்கு கைவிலங்கிட்ட பொலிஸார் மன்னிப்புக் கோரினர்!

T

The Leader Desk

அக்டோபர் 4, 2024 • 4:05 AM

யுக்திய நடவடிக்கையின்போது வழக்கறிஞரின் சாரதிக்கு கைவிலங்கிட்ட பொலிஸார் மன்னிப்புக் கோரினர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கைது செய்யப்பட வேண்டிய நபர் என்று தவறாகக் கருதி,வீதியில் வைத்து வழக்கறிஞர் ஒருவரின் சாரதியை கைவிலங்கிட்டமை தொடர்பான வழக்கு விசாரடை இன்று (03) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது மனுதாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை பொலிஸ் அதிகாரிகள் கோரினர்.
  • பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்திலிருந்து வாகனத்தில் திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடையில் வந்த சிலர் வீதிக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கைது செய்யப்பட வேண்டிய நபர் என்று தவறாகக் கருதி,வீதியில் வைத்து  வழக்கறிஞர் ஒருவரின் சாரதியை கைவிலங்கிட்டமை தொடர்பான வழக்கு விசாரடை  இன்று (03) உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது மனுதாரரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பை பொலிஸ் அதிகாரிகள் கோரினர்.

களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த செல்வராஜ் ராஜபாண்டி என்பவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டது.
 
பிரிதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இந்த சம்பவத்துக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் திஸாநாயக்க, பிரேமரத்ன பொலிஸ் கான்ஸ்டபிள்களான ரத்னசிறி, சேனாதிரா மற்றும் நாணயக்கார ஆகியோர் மன்னிப்பு கோரினர்.
 
கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்திலிருந்து வாகனத்தில் திரும்பியபோது மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடையில் வந்த சிலர் வீதிக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தியதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
 
அப்போது மனுதாரர், "நாங்கள் பொலிஸில் இருந்து வருகிறோம்" என்று கூறிய சிவில் உடை அணிந்த குழுவினர் தனக்கு  கைவிலங்கிட்டு, வலது கையில் பச்சை குத்தப்பட்டுள்ளதா என்று சோதித்ததாகக் கூறினார்.
 
அவர் கையில் பச்சை குத்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பின்னர், "அவரல்ல... தவறு" என்று கூறிவிட்டு அவர்கள் சென்றதாகவும் மனுதாரர் கூறினார்.
 
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​இந்த அதிகாரிகள் நீர்கொழும்பு பொலிஸில் கடமையாற்றியவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், அதன் பிரகாரம் இந்த அடிப்படை உரிமை மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...