Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மேல் மாகாண‌ ஆளுன‌ர் தொடர்பான நிசாம் காரிய‌ப்ப‌ரின் க‌ருத்து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து! - உல‌மா க‌ட்சி

T

The Leader Desk

அக்டோபர் 3, 2024 • 3:56 PM

மேல் மாகாண‌ ஆளுன‌ர் தொடர்பான நிசாம் காரிய‌ப்ப‌ரின் க‌ருத்து சிறுபிள்ளைத்த‌ன‌மான‌து! - உல‌மா க‌ட்சி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆளுநராக்க அவருக்கு அரச நிர்வாகத்தில் என்ன தகுதி இருக்கிறது என்ற‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் செய‌லாள‌ர் நிசாம் காரிய‌ப்ப‌ரின் க‌ருத்தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.
  • என்று நிஸாம் காரியப்பர் சொல்லியுள்ள‌மை சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ க‌ருத்தாகும்.
  • இது தொடர்பில் ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து, அண்மையில் ஊட‌க‌த்தில் நிசாம் காரிய‌ப்ப‌ர் க‌ருத்து தெரிவிக்கும் போது ஹ‌னீப் யூசுப் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
எழுத்து அளவு:

ஆளுநராக்க அவருக்கு அரச நிர்வாகத்தில் என்ன தகுதி இருக்கிறது என்ற‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌சின் செய‌லாள‌ர் நிசாம் காரிய‌ப்ப‌ரின் க‌ருத்தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.

இது தொடர்பில் ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்திருப்ப‌தாவ‌து,
 
அண்மையில் ஊட‌க‌த்தில் நிசாம் காரிய‌ப்ப‌ர் க‌ருத்து தெரிவிக்கும் போது
 
ஹ‌னீப் யூசுப் ஒரு சிறந்த வர்த்தகர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் ஏற்றுமதி துறையில் மில்லியன் கணக்கான பணத்தை நாட்டிற்கு ஈட்டித்தந்துள்ளார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் அனுரவின் வெற்றிக்காக நிதி வழங்கியிருக்கலாம். அதனால் அவருக்கு கைமாறாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதா? என்று  நிஸாம் காரியப்பர் சொல்லியுள்ள‌மை சிறுபிள்ளைத்த‌ன‌மான‌ க‌ருத்தாகும்.
 
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ப‌ல‌ கிளைக‌ளைக்கொண்ட‌ ஒரு பெரிய‌ நிறுவ‌ன‌த்தை சிற‌ப்பாக‌ நிர்வ‌கிக்கும் ஒருவ‌ருக்கு ஆளுன‌ர் ப‌த‌வியில் இருப்ப‌து பெரிய‌ விச‌ய‌ம‌ல்ல‌.  
 
அர‌சிய‌ல் பின்ன‌ணியை ம‌ட்டும் கொண்ட‌ அல‌வி மௌலானா மேல் மாகாண‌ ஆளுன‌ராக‌ மிக‌ சிற‌ப்பாக‌ க‌ட‌மையாற்றினார். நிசாம் காரிய‌ப்ப‌ரின் த‌லைவ‌ர் அஷ்ர‌ப் அவ‌ர்க‌ள் அல‌வி மௌலானாவுட‌ன் நெருங்கி செய‌ற்ப‌ட்ட‌துட‌ன் அவ‌ர் செய‌ற்பாடு ப‌ற்றி விய‌ந்து பேசுவார்.
 
அவ‌ரைப்போன்று க‌ர்வ‌ம‌ற்ற‌, ச‌க‌ல‌ருட‌ன் அன்பாக‌ பேசும் ஒருவ‌ராக‌ மேல் மாகாண‌ ஆளுன‌ரை நாம் காண்கிறோம். 
 
ஒரு வியாபார நிறுவ‌ன‌த்தின் உரிமையாள‌ரான‌, அர‌சிய‌ல் என்றே என்ன‌வென்றும் தெரியாத‌  புஹார்தீன் ஹாஜியை அவ‌ர் க‌ட்சிக்கு காசு கொடுத்த‌த‌ற்காக‌ அஷ்ர‌ப் எம்பியாக‌ நிய‌மித்த‌து நிசாம் காரிய‌ப்ப‌ருக்கு ம‌ற‌ந்து விட்ட‌தா? எம்பியாக‌ இருக்கும் எந்த‌ த‌குதியும் இல்லாத‌ ஒருவ‌ரை காசுக்காக‌ நிய‌மிப்ப‌து ச‌ரியா என‌ அஷ்ர‌பிட‌ம் அன்று நிசாம் காரிய‌ப்ப‌ர் ப‌கிர‌ங்க‌மாக‌ கேட்டாரா?
 
மேல் மாக‌ண‌த்துக்கான‌ ஆளுன‌ராக‌ த‌குதிவாய்ந்த‌ ஒருவ‌ரையே கௌர‌வ‌ ஜ‌னாதிப‌திஅநுர‌ குமார‌ நிய‌மித்துள்ளார் என்று உல‌மா க‌ட்சி உறுதியாக‌ ந‌ம்புகிற‌து.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...