Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ரணிலின் சிலிண்டர் புதிய ஜனநாயக முன்னணிக்கு!

T

The Leader Desk

அக்டோபர் 3, 2024 • 3:52 AM

ரணிலின் சிலிண்டர் புதிய ஜனநாயக முன்னணிக்கு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியிடுவதற்காக தனது கட்சியின் 'அன்னம்' சின்னத்துக்குப் பதிலாக 'காஸ் சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு நேற்று (02) அங்கீகாரம் கிடைத்துள்ளதாக 'புதிய ஜனநாயக முன்னணி' தெரிவித்துள்ளது.
  • கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 'புதிய ஜனநாயக முன்னணி' ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது.
  • நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை நீண்ட நேரம் பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:

போட்டியிடுவதற்காக தனது கட்சியின் 'அன்னம்' சின்னத்துக்குப் பதிலாக 'காஸ் சிலிண்டர்' சின்னத்தில் போட்டியிட அனுமதிக்குமாறு

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்ட எழுத்துமூல கோரிக்கைக்கு  நேற்று (02)  அங்கீகாரம் கிடைத்துள்ளதாக 'புதிய ஜனநாயக முன்னணி' தெரிவித்துள்ளது.

நேற்று கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை நீண்ட நேரம் பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 'புதிய ஜனநாயக முன்னணி' ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தது.

கடந்த வாரம் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்த அனைத்து கட்சிகளும் குழுக்களும் சிலிண்டர் சின்னத்தில் பொதுத் தேர்தலில் நின்று புதிய ஜனநாயக முன்னணியை பரந்த கூட்டணியாக ஸ்தாபிக்க தீர்மானித்திருந்தன.

எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ‘யானை’ சின்னத்தில் போட்டியிடுவது என ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு தீர்மானித்திருந்தது.

எவ்வாறாயினும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த அனைத்துக் கட்சிகளும் இன்று (03) காலை கொழும்பில் அமைந்துள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் சின்னம் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளன

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...