Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்! -அமைச்சர் விஜித

T

The Leader Desk

அக்டோபர் 2, 2024 • 4:08 AM

தேர்தல் ஆணையத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்கிறோம்! -அமைச்சர் விஜித

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
  • அதன்படி செயற்படுவோம்." செப்டெம்பர் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஹெக்டேயருக்கு 15,000 ரூபா உர மானியத்தை எதிர்வரும் பருவத்தில் 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
  • அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
 
"இது தேர்தல் காலம் என்பதால், தேர்தல் ஆணையம் இடைநிறுத்தக் கூறியது. தேர்தல் ஆணையத்தின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதன்படி செயற்படுவோம்."
 
செப்டெம்பர் 26ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஹெக்டேயருக்கு 15,000 ரூபா உர மானியத்தை எதிர்வரும் பருவத்தில் 25,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார்.
 
ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய மானியங்களை வழங்குவதன் மூலம் ஒரு தரப்பினர் பயனடையலாம் என்பதால், மானியம் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 
தேர்தலுக்குப் பின்னர் உரிய பிரேரணையை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
 
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உரிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேசிய அமைப்பு ஒன்று ஒன்றிணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.
 
தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு எதிர்வரும் பருவத்துக்கான உர மானியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுக்க நேரிடும் என விவசாய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...