Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஹங்வெல்ல வர்த்தகர் கொலை; கப்பம் வழங்காமையே காரணம் என விசாரணையில் தகவல்!

T

The Leader Desk

அக்டோபர் 2, 2024 • 3:53 AM

ஹங்வெல்ல வர்த்தகர் கொலை; கப்பம் வழங்காமையே காரணம் என விசாரணையில் தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அடிப்படையிலேயே ஹங்வெல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நேற்று முன்தினம் (30) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
  • ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி குறித்த வர்த்தகரை படுகொலை செய்துள்ளார்.
  • துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த 55 வயதான வஜிர நிஷாந்த என்ற வர்த்தகர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
  • இறந்தவரின் வீடு 2021 இல் தாக்கப்பட்டதுடன் அவரது வர்த்தக இடமும் தீக்கிரையாக்கப்பட்டது.
எழுத்து அளவு:

அடிப்படையிலேயே ஹங்வெல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரால் நேற்று முன்தினம் (30) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கர என்ற பாதாள உலகக் குழு உறுப்பினர் இந்தக் கொலையை முன்னெடுத்துள்ளதாகவும், அதேநேரம் அவரிடம் கப்பம் கோரிய வர்த்தகர்கள் குழுவொன்று அப்பகுதியில் உள்ள வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அவரது கொலை மிரட்டல்களுக்கு அஞ்சி வர்த்தகர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 
இந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்பில் மேற்கு தெற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.கயங்க மாரப்பனவின் மேற்பார்வையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
ஹங்வெல்ல, நெலுவத்துடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள்  நுழைந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி குறித்த வர்த்தகரை படுகொலை செய்துள்ளார்.
 
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி குற்றத்தைச் செய்வதற்காக வீட்டின் சுவரில் இருந்து குதித்தார் என்பதும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எப்படி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பினார் என்பதும் சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
 
துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் காயமடைந்த 55 வயதான வஜிர நிஷாந்த என்ற வர்த்தகர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இறந்தவரின் வீடு 2021 இல் தாக்கப்பட்டதுடன் அவரது வர்த்தக இடமும் தீக்கிரையாக்கப்பட்டது.
 
லலித் கன்னங்கர என்ற நபர் பல சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்ட வர்த்தகரிடம் கப்பம் கோரியதாகவும், பணத்தை வழங்காததற்காக அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமையும் விசாரணைகளில் தெரிய வந்தது.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...