பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
முன்னாள் எம்பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்த முடியாது!
T
The Leader Desk
அக்டோபர் 1, 2024 • 4:25 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
- பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், காப்புறுதி திட்டங்கள், தொலைபேசி கொடுப்பனவுகள் போன்ற சலுகைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
- எவ்வாறாயினும் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் பொதுத் தேர்தல் முடியும் வரை முன்னாள் எம்.பி.க்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எழுத்து அளவு:
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் இராஜதந்திர கடவுச்சீட்டுகள், கொடுப்பனவுகள், காப்புறுதி திட்டங்கள், தொலைபேசி கொடுப்பனவுகள் போன்ற சலுகைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
எவ்வாறாயினும் மாதிவெல வீடமைப்புத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகளில் பொதுத் தேர்தல் முடியும் வரை முன்னாள் எம்.பி.க்கள் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்பட்டுள்ள ரிவோல்வர்களை மீள ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட துப்பாக்கிகளை பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதியின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை வைத்திருக்க முடியும் என்று அவர் கூறினார்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

