Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

கூட்டணியில் இணைவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸும் கலந்தாலோசனை!

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2024 • 3:42 AM

கூட்டணியில் இணைவது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸும் கலந்தாலோசனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • போட்டியிடுவதற்காக பல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
  • எவ்வாறாயினும், புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
எழுத்து அளவு:

போட்டியிடுவதற்காக பல தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த வாரம்  இடம்பெற்றது.

எவ்வாறாயினும், புதிய கூட்டணியை உருவாக்குவது குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஐக்கிய மக்கள் சக்தியின. பங்காளிகள் என்பதுடன் அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ப்பது குறித்தும் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறான நிலையில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டால் பாராளுமன்றத்தில் அதிகளவான ஆசனங்களை தமக்கே சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என இக்கட்சிகள் கருதுகின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...