Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

குமார வெல்கமவின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் அனுதாபம்!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2024 • 6:19 AM

குமார வெல்கமவின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் அனுதாபம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துணிந்து கருத்துக்களால் எதனையும் எதிர் கொள்ளக் கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
  • முன்னாள் அமைச்சரும்,சக பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கம மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அந்தப் பிரதேசத்த்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக் கூடியவராக இருந்து வந்துள்ளார்.
  • இதேவேளை முஸ்லிpம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகள் கடந்த தேர்தல்களில் குமார வெல்கமவுக்கு அளிக்கப்பட்டமையானது,அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய இணக்கத்தை எடுத்துகாட்டுகிறது.
எழுத்து அளவு:

துணிந்து கருத்துக்களால் எதனையும் எதிர் கொள்ளக் கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும்,சக பாராளுமன்ற உறுப்பினருமாகிய குமார வெல்கம  மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியதுடன், அந்தப் பிரதேசத்த்தில் வாழும் மூவின மக்களினாலும் விரும்பக் கூடியவராக இருந்து வந்துள்ளார்.
 
இதேவேளை முஸ்லிpம்கள் செறிந்துவாழும் வெலிகம பகுதி மக்களின் அதிகப்படியான வாக்குகள் கடந்த தேர்தல்களில் குமார வெல்கமவுக்கு அளிக்கப்பட்டமையானது,அப்பிரதேச முஸ்லிம்களுடன் அவருடைய இணக்கத்தை எடுத்துகாட்டுகிறது.
 
மக்களின் நன்மைக்காக தான் வகிக்கும் அமைச்சுப் பதவியைக் கூட விட்டு சாதாராண பாராளுமன்ற உறுப்பினராக இருந்து துணிந்தும்,அச்சமின்றியும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தமது ஆழமான கருத்தை தெரிவித்துவந்த ஒரு அரசியல்வாதியாக அமரர் குமார வெல்கமவை காணமுடியும். 
 
குமார வெல்கம சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தமது 74 வயதில் மரணமாகியுள்ளார். 
 
அன்னாரது இழப்பினால் துயறுற்றிருக்கும் குடும்பத்தினர்கள்,மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கு தனது ஆழ்ந்த கவலையினை தெரிவிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

குமார வெல்கமவின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் அனுதாபம்! | Tamil Leader | We Lead the Nation