Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் லக்க்ஷ்மன் நிபுணராச்சிக்கு ஏன் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லை?

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2024 • 5:39 AM

தேசிய மக்கள் சக்தியின் லக்க்ஷ்மன் நிபுணராச்சிக்கு ஏன் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லை?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதியினால் வெற்றிடமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளைப் பெற்ற லக்க்ஷ்மன் நிபுணராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் அறிவித்தது.
  • அதன்பிறகு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட அமைச்சரவையில் அவரும் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.
  • ஆனால் இறுதியில் லக்ஷ்மன் நிபுணராச்சி தவிர்ந்த ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் லக்ஷ்மன் நிபுணராச்சிக்கு என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரியாது.
எழுத்து அளவு:

ஜனாதிபதியினால் வெற்றிடமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு, கட்சியின் பட்டியலில் அடுத்த அதிகூடிய வாக்குகளைப் பெற்ற லக்க்ஷ்மன் நிபுணராச்சியை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் அறிவித்தது.

அதன்பிறகு, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 பேர் கொண்ட அமைச்சரவையில் அவரும் இடம் பெறுவார் என்று கூறப்பட்டது.
 
இதன்படி, அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணி அமரசூரிய, விஜித ஹேரத் மற்றும் லக்ஷ்மன் நிபுணராச்சி ஆகியோருக்கு அமைச்சுப் பங்கீடு செய்யப்படவிருந்தது.
 
ஆனால் இறுதியில் லக்ஷ்மன் நிபுணராச்சி தவிர்ந்த ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட போதிலும் லக்ஷ்மன் நிபுணராச்சிக்கு என்ன நடந்தது என்பது பலருக்கும் தெரியாது.
 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி, சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இது இடம்பெற்றதாக குறிப்பிடுகிறார்.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினராக ஏற்று வர்த்தமானியில் பிரகடனம் செய்திருந்தாலும் அமைச்சராக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருக்க வேண்டும் என்பதே சட்டமா அதிபரின் கருத்து என நிபுணராச்சி கூறுகிறார்.
 
ஆனால் பசில் ராஜபக க்ஷ முன்னர் அவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்யாமல் அமைச்சராக செயற்பட்டதாகவும், தமது கட்சி முன்னைய தவறுகளை செய்யாத காரணத்தினால், தன்னைத் தவிர ஏனைய மூவரையும் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க தீர்மானித்ததாகவும் அவர் வானொலி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தேசிய மக்கள் சக்தியின் லக்க்ஷ்மன் நிபுணராச்சிக்கு ஏன் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படவில்லை? | Tamil Leader | We Lead the Nation