Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் இல‌ங்கை ம‌க்க‌ளுக்கான‌ உரைக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு!

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2024 • 11:23 AM

ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் இல‌ங்கை ம‌க்க‌ளுக்கான‌ உரைக்கு உல‌மா க‌ட்சி பாராட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டை உருவாக்குவோம் என்ற‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் ம‌க்க‌ளுக்கான‌ உரையில் வ‌லியுறுத்தியிருப்ப‌து பெரிதும் பாராட்ட‌ப்ப‌டும் செய‌ல் என‌ ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
  • எம்மை பொறுத்த‌வ‌ரை இந்த‌ நாட்டின் பொருளாதார‌ சீர்குலைவுக்கு பிர‌ய்ஹான‌ கார‌ண‌ம் இன‌வாத‌ம் இன‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளுமாகும்.
  • மேல் மாக‌ண‌ம், கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ள் க‌ணிச‌மாக‌ இத்தேர்த‌லில் வாக்க‌ளித்துள்ள‌ன‌ர்.
எழுத்து அளவு:

நாட்டை உருவாக்குவோம் என்ற‌ ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வின் ம‌க்க‌ளுக்கான‌ உரையில் வ‌லியுறுத்தியிருப்ப‌து பெரிதும் பாராட்ட‌ப்ப‌டும் செய‌ல் என‌  ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க்  அப்துல் ம‌ஜீத் முப்தி கௌர‌வ‌ ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்தில் மேலும் குறிப்பிட்டுள்ள‌தாவ‌து, 
 
இல‌ங்கையின் அண்மைக்கால‌  ஜ‌னாதிப‌திக‌ள் வ‌ர‌லாற்றில் ச‌ந்திரிக்கா ப‌ண்டார‌நாய‌க்காவுக்கு பின் சிறுபான்மை ம‌க்க‌ள் அதிக‌ம் வாக்க‌ளித்து வெற்றிபெற்ற‌ ஜ‌னாதிப‌தியாக‌ அநுர‌குமார‌ திசாநாய‌க்க‌ உள்ளார்.
 
மேல் மாக‌ண‌ம், கிழ‌க்கு மாகாண‌ முஸ்லிம்க‌ள் க‌ணிச‌மாக‌ இத்தேர்த‌லில் வாக்க‌ளித்துள்ள‌ன‌ர். த‌ம‌து பார‌ம்ப‌ரிய‌ க‌ட்சிக‌ளான‌ ர‌வூப் ஹ‌க்கீம், ரிசாத் ப‌தியுதீன், அதாவுள்ளாவின் க‌ட்சிக‌ள் பாரிய‌ பிர‌ச்சார‌ங்க‌ளை கொண்டிருந்தும் அக்க‌ட்சிக‌ளின் வாக்காள‌ர்க‌ள் ப‌ல‌ர் ஜ‌னாதிப‌தி அநுர‌குமார‌வுக்கே வாக்க‌ளித்துள்ள‌ன‌ர்.  
 
இத‌ற்கு பிர‌தான‌ கார‌ண‌ம் நாட்டின் ஊழ‌லை ஒழித்து நேர்மையான‌, இன‌வாத‌ம‌ற்ற‌ ஆட்சியை உருவாக்குவேன் என்ற‌ ஜ‌னாதிப‌தியின் வாக்குறுதியை ந‌ம்பி வாக்க‌ளித்துள்ள‌ன‌ர்.
 
எம்மை பொறுத்த‌வ‌ரை இந்த‌ நாட்டின் பொருளாதார‌ சீர்குலைவுக்கு பிர‌ய்ஹான‌ கார‌ண‌ம் இன‌வாத‌ம் இன‌க்க‌ல‌வ‌ர‌ங்க‌ளுமாகும். இக்க‌ல‌வ‌ர‌ங்க‌ள் காரண‌மாக‌ ப‌ல‌ முஸ்லிம் முத‌லாளிக‌ள் த‌ம‌து வியாபார‌ க‌ம்ப‌ணிக‌ளை மூடி வெளிநாடு சென்ற‌ன‌ர்.
 
 நாட்டை பொறுப்பேற்ற ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் த‌ன‌து வாக்குறுதிக‌ளை நிறைவேற்றுவேன் என்றும் பொருளாதார‌ பிர‌ச்சினைக‌ளை தீர்த்து, ந‌ல்ல‌ நிர்வாகிக‌ளை நிய‌மித்து இன‌வாத‌ம் இல்லா நாட்டை க‌ட்டியெழுப்புவேன் என்றும் நாட்டு ம‌க்க‌ளுக்கான‌ ஜ‌னாதிபதியின் உரையில் குறிப்பிட்டிருப்ப‌து பெரிதும் வ‌ர‌வேற்புக்குரிய‌தாகும். அத்த‌கைய‌தொரு நாட்டை க‌ட்டியெழுப்பும் ஜ‌னாதிப‌தியின் முய‌ற்சிக‌ளுக்கு உல‌மா க‌ட்சியின் ஒத்துழைப்பு என்றும் இருக்கும்.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...