Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரியால் பொலிஸ் உத்தியோகத்தர் துஷ்பிரயோகம்

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2024 • 11:08 AM

யாழில் பொலிஸ் பொறுப்பதிகாரியால் பொலிஸ் உத்தியோகத்தர் துஷ்பிரயோகம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
  • அதனை அவர் தடுத்து எச்சரித்துள்ளார்.
  • அதேவேளை குறித்த பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், மனவுளைச்சலுக்கு உள்ளாகி பொலிஸ் வேலையில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளிடம் கடிதம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

உத்தியோகஸ்தரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பொறுப்பதிகாரி தொடர்ந்தும் தன்னை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், மனவுளைச்சலுக்கு உள்ளாகி பொலிஸ் வேலையில் இருந்து விலகுவதாக உயர் அதிகாரிகளிடம் கடிதம் கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி, அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சிலருடன் மாதகல் கடற்கரை பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு, பொறுப்பதிகாரிக்கு தெரிந்த வெளிநபர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களுடன் இணைந்து மது அருந்திய பின்னர் கடலில் குளித்த போது, பொறுப்பதிகாரி, தன்னுடன் அழைத்து சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனை அவர் தடுத்து எச்சரித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, பொலிஸ் நிலையம் வரும் வழியில், விடுதி ஒன்றுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தரை அழைத்து சென்று, அங்குள்ள அறை ஒன்றிற்குள் பூட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதனால், பொலிஸ் உத்தியோகஸ்தர் பொறுப்பதிகாரியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் சென்றிருந்தார்.

பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பதிவேட்டு புத்தகத்தில் குறித்த சம்பவம் தொடர்பில் முழுமையாக எழுதியுள்ளார்.

தொடர்ந்து பொலிஸ் உயர் அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆனால் சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் உரிய விசாரணைகளை முன்னெடுத்து, நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், குறித்த சம்பவத்தின் பின்னர் பொறுப்பதிகாரி தன்னை பழிவாங்கும் வகையில் தொடர்ந்து செயற்படுவதனால் மனவுளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதால், பொலிஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தெரிவித்துள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...