Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இனி இடமில்லை! - அமைச்சர் விஜித ஹேரத்

T

The Leader Desk

செப்டம்பர் 26, 2024 • 4:10 AM

பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இனி  இடமில்லை!  - அமைச்சர் விஜித ஹேரத்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
  • பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (25) பதவியேற்றதன் பின்னர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.
  • எனவே பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் ரீதியில் நட்பாக இருந்தாலும் விசேட கவனிப்பு தேவையில்லை எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

கீழ் பொலிஸ் திணைக்களத்தில் அரசியல் தலையீடுகள் இருக்காது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று (25) பதவியேற்றதன் பின்னர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனத்தில் தேசிய மக்கள் சக்தியினரோ பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களோ தலையிடமாட்டார்கள் எனவும் முன்னைய ஆட்சியாளர்கள் பின்பற்றிய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பார்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

எனவே பழைய கலாசாரத்தை மாற்றி புதிய கலாசாரம் உருவாக்கப்பட வேண்டும் எனவும், அரசியல் ரீதியில் நட்பாக இருந்தாலும் விசேட கவனிப்பு தேவையில்லை எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு மாற்றத்தை எதிர்பார்த்தே இந்நாட்டு மக்கள் தேசிய மக்கள்  சக்திக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும், கடந்த காலங்களில் பொலிஸார் மீதான மக்களின் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாகவும் அவர் கூறினார்.

"கடந்த காலத்தின் பழைய மற்றும் தவறான நடைமுறைகளை மாற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு முழு ஆதரவை வழங்குகிறோம், மேலும் பொலிஸ் அதிகாரிகள் என்ற வகையில் சுதந்திரமாகச் செயல்பட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது உங்கள் கடமையாகும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...