வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த உத்தியோகபூர்வ வாகனத்தை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட திணைக்களத்தின் தனியார் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பாளர் மற்றும் பாதுகாப்பு முகாமையாளர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
வாக்களிக்க ஊருக்குச் செல்வதற்காக சட்ட மா அதிபர் திணைக்கள வாகனத்தைக் கடத்திச் சென்ற இருவர்!
T
The Leader Desk
செப்டம்பர் 24, 2024 • 3:18 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான கேகாலையைச் சேர்ந்த அமில நுவன் ஜயதிஸ்ஸ மற்றும் கடுகண்ணாவையைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எழுத்து அளவு:
சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வாகனம் கடத்தப்பட்டதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன கெகுணாவெல உத்தரவிட்டுள்ளார்.
வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்ததுடன், சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் வாகன தரிப்பிடத்தில் இருந்து உத்தியோகபூர்வ வாகனத்தை இரகசியமாக அவர்களது ஊர்களுக்கு எடுத்துச் சென்று 3 நாட்களின் பின்னர் மீண்டும் கொண்டு வந்ததாக தெரிவித்தனர்.
பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் துஷ்பிரயோகம் மற்றும் நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான கேகாலையைச் சேர்ந்த அமில நுவன் ஜயதிஸ்ஸ மற்றும் கடுகண்ணாவையைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

