Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

புதிய ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்தை வாழ்த்தி வரவேற்கிறோம் என்கிறார் மு.கா செயலாளர்!

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2024 • 3:01 PM

புதிய ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்தை வாழ்த்தி வரவேற்கிறோம் என்கிறார் மு.கா செயலாளர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்துள்ள செய்தி நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக நடைமுறையின் உச்சகட்டமும், இலங்கையின் வரலாற்று முக்கியத்துவத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
  • இது எந்த ஒரு தீவிரவாத உணர்வுகளோ அல்லது வேறெந்த குறுகிய உணர்வுகளோ தலைதூக்காமல் கிடைத்த வெற்றியாகும்.
  • தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாட்டை ஆதரித்து, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுத்து அளவு:

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் விடுத்துள்ள செய்தி

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதித் தேர்தல் ஜனநாயக நடைமுறையின் உச்சகட்டமும்,
இலங்கையின் வரலாற்று முக்கியத்துவத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
 
தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்ட நிலைப்பாட்டை ஆதரித்து, ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பாரபட்சமின்றி ஒத்துழைத்த தேசிய தேர்தல் ஆணைக் குழு பொலிஸ் திணைக்களம் மற்றும் இதர நிறுவனங்களுக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இந்தத் தேர்தல், நாட்டின் பிரஜைகளின் மறுமலர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், புதியதொரு அரசியல் கலாசாரம் மற்றும் அணுகுமுறைக்கான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. அதுவே இலங்கையர்களாகிய நம் அனைவருக்கும் ஒருமித்த செய்தியாக உள்ளது.
 
இது எந்த ஒரு தீவிரவாத  உணர்வுகளோ அல்லது வேறெந்த குறுகிய உணர்வுகளோ தலைதூக்காமல் கிடைத்த வெற்றியாகும்.
 
மேலாதிக்க சிந்தனைப் போக்குக்கு மாற்றமான 
கொள்கை தளத்தில்  நாங்கள் நம்பிக்கை 
வைத்திருப்தோடு அதுவே புதிய அரசியல் கலாசாரத்தின் அடித்தளமுமாகும்
 
இது இலங்கை மக்களின் நீண்டகால ஏக்கத்தின் வெளிப்பாடாகும்.
ஊழலற்ற ஆட்சி மற்றும் இன, மத,மொழி பேதங்களுக்கு அப்பால்  ஒருங்கிணைந்த தேசமாக சகல சமூகங்களும் முன்னேற வேண்டும்.
 
இந்தத் தேர்தல் சந்தேகத்திற்கிடமின்றி மக்களின் ஜனநாயகக் குரலுக்குச் சான்று பகரும்  அதே வேளையில், புதிய ஜனாதிபதியின் வெற்றிகரமான பயணத்தை நாங்கள்  வாழ்த்தி வரவேற்கின்றோம்.
 
எம்.நிசாம் காரியப்பர், 
ஜனாதிபதி சட்டத்தரணி,
செயலாளர், 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...