Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

தேசத்தின் தீர்க்கப்படாத முரண்பாடுகளை நிவர்த்திக்கும் ஒளி இப்போது பாய்ச்சப்படுகிறது! -ரவூப் ஹக்கீம்

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2024 • 6:48 AM

தேசத்தின் தீர்க்கப்படாத முரண்பாடுகளை நிவர்த்திக்கும் ஒளி இப்போது  பாய்ச்சப்படுகிறது! -ரவூப் ஹக்கீம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புதிய ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
  • அன்புடன், ரவூப் ஹக்கீம்,u சட்டமுதுமாணி, பாராளுமன்ற உறுப்பினர், தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
எழுத்து அளவு:

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்  ரவூப் ஹக்கீம் புதிய ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,
 
 தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை வெளிப்படுத்தியுள்ள நிலையில்,புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது சகாக்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதோடு,தேசப்பற்றுடன் ஜனநாயகத்தின் உண்மையான உணர்வோடு இந்த வெற்றியை நாங்கள் நிலைநிறுத்துவோமாக.
 
நமது தேசத்தின் இதுகாறும் தீர்க்கப்படாத முரண்பாடுகளை நிவர்த்தி செய்யவதற்கான ஒளி இப்போது புதிய அணியினர் ஊடாகப்  பாய்ச்சப்படுகின்றது.நாட்டின் அரசியலில் ஒரு புதிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம்,  பல சவால்களை எதிர்கொள்வதற்கான திராணியை வளர்த்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய இச்சந்தர்ப்பத்தில்,  பிராந்தியத்துடனும், சர்வதேசத்துடனும் சமாதானத்திற்காக ஒத்துழைக்கும் தோழமையை அனைத்து இலங்கையர்களும் வரிந்து கொள்வோமாக.
 
இதே வேளையில்,நாம் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் கௌரவ சஜித் பிரேமதாசவுக்கும் மனப்பூர்வமான பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.  மற்றும்  எங்கள் மீது நம்பிக்கை வைத்து, தங்களுடைய காலத்தையும் நேரத்தை அர்ப்பணித்து, பெறுமதியான   வாக்குரிமையைப் பயன்படுத்திய சகல சமூகங்களையும் சேர்ந்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.
 
அன்புடன்,
ரவூப் ஹக்கீம்,u சட்டமுதுமாணி,
பாராளுமன்ற உறுப்பினர்,
தலைவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...