Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

மேலும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர்; கட்டுநாயக்கவில் விமானப்படை குவிப்பு!

T

The Leader Desk

செப்டம்பர் 22, 2024 • 1:39 AM

மேலும் பலர் நாட்டை விட்டு வெளியேறினர்; கட்டுநாயக்கவில் விமானப்படை குவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று 21ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இலங்கை விமானப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.
  • இதன்படி, (21ஆம் திகதி) மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.
  • அத்துடன், (21ஆம் திகதி) இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிச் சென்றார்.
  • அத்துடன், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டார்.
எழுத்து அளவு:

சர்வதேச விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் நேற்று 21ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இலங்கை விமானப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இருந்தது.

இதேவேளை, அரசியல் பிரமுகர்கள் பலர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதன்படி, (21ஆம் திகதி) மாலை 02.25 மணியளவில் முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏஐ-272 விமானத்தில் இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார்.

அத்துடன், (21ஆம் திகதி) இரவு 11.15 மணியளவில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தாய் எயார் ஏசியா விமானம் FD-141 இல் தாய்லாந்தின் பாங்கொக் நோக்கிச் சென்றார்.

அத்துடன், இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (22) அதிகாலை 12.50 மணியளவில் ஹொங்கொங் நோக்கிப் புறப்பட்டார்.

அத்துடன், ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷவின் மனைவியான லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க  ஆகியோர் எமிரேட்ஸ் விமானமான ஈ.கே.-649 இல் அதிகாலை 03.30 மணியளவில் துபாய் நோக்கிச் சென்றுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவைகள் இல்லாததால் துபாய் வழியாக அவர் அமெரிக்கா சென்றிருக்கலாம் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...