Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப நானே காரணம்! -ரணில் விக்கிரமசிங்க

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 2:08 PM

பொதுஜன பெரமுன, சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப நானே காரணம்! -ரணில் விக்கிரமசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • துன்பங்களை மறவாது, சரியான தீர்மானத்தை எடுத்து தமது எதிர்காலத்திற்கான பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • அத்துடன், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் தானே அவரையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச் சென்றதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
  • ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப தானே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

துன்பங்களை மறவாது, சரியான தீர்மானத்தை எடுத்து தமது எதிர்காலத்திற்கான பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்ட வேளையில் தானே அவரையும் ஐக்கிய தேசிய கட்சியையும் பாதுகாத்து முன்னோக்கி கொண்டுச் சென்றதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மயிரிழையில் உயிர்தப்ப தானே காரணமெனவும் அவர் தெரிவித்தார்.

தெல்கொட பிரதேசத்தில் நேற்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். 

தனது அரசியலை ஆரம்பித்த பியகமவில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்தி குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் பலன்களை இன்று அரசியல்வாதிகள் மட்டுமன்றி அனைவரும் அனுபவிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். 

பியகமவை அபிவிருத்தி செய்த பாணியிலேயே நாடு முழுவதும் வர்த்தக வலயங்களை ஆரம்பித்து முழு நாட்டையும் அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கமென ஜனாதிபதி தெரிவித்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...