Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

அநுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்! - ரிஷாத்!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 1:55 PM

அநுரவுக்குப் பின்னால் அலைவோர் அடுத்த ஆபத்தை உணராதுள்ளனர்! - ரிஷாத்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஒரு சிலரே மாற்றம் வேண்டுமெனக் கோரி , அனுரகுமாரவுக்குப் பின்னால் அலைகின்றனர் என்றும் அடுத்த ஆபத்தை அறியாமலேயே இவர்கள் இவ்வாறு அலைந்துதிரிவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து , புத்தளத்தில் ( 17) இட ம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , மேலும் கூறியதாவது , " முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக பாராளுமன்றத்தில் கூறியவர்தான் அனுரகுமார திஸாநாயக்க.
  • அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு வருடங்களில் ஓடினார்.
எழுத்து அளவு:

ஒரு சிலரே மாற்றம் வேண்டுமெனக் கோரி, அனுரகுமாரவுக்குப் பின்னால் அலைகின்றனர் என்றும் அடுத்த ஆபத்தை அறியாமலேயே இவர்கள் இவ்வாறு அலைந்துதிரிவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில்(17) இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மேலும் கூறியதாவது,

"முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக பாராளுமன்றத்தில் கூறியவர்தான் அனுரகுமார திஸாநாயக்க. ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கொரோனா நேரங்களிலும் அனுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது. ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள்தான்.

தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர், இன்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர். வாகன கோட்டா வசதிகளையும் இவர்கள் பெறுகின்றனர். வருடக்கணக்காக குற்றப்பயில்களை வைத்துக்கொண்டு அலையும் இவர்களால், ஒரு கள்வனையாவது பிடிக்க முடியவில்லை. இவர்களால் வீசா மோசடியைத் தடுக்க முடியவில்லை. கெஹெலியவுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் தேசிய மக்கள் சக்தி பேசவே இல்லை. இந்த லட்சணத்தில்தான் மாற்றம் வேண்டும் எனப் பிரச்சாரம் செய்கின்றனர்.

அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு வருடங்களில் ஓடினார். அந்தக் காய்ச்சல் நீங்குவதற்குள் அனுரவின் காய்ச்சல் சிலரைப் பீடித்துள்ளது. அனுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும். சொந்தங்களை, உறவுகளைக்கூடக் கவனிக்காத, தொப்பி அணிந்த சிலரே, அனுரவுக்குப் பின்னால் வீர வசனம் பேசுகின்றனர்.

ரணிலுக்கு அளிக்கும் வாக்குகளை கடலில் கொட்டிவிடலாம். களப்போட்டியில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.

எழுபது வருடங்கள் எம்.பி இல்லாத  அனுராதபுரத்துக்கு எம்.பியை பெற்றுக்கொடுத்தோம். புத்தளம் மாவட்டத்துக்கும் நாங்களே பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொடுத்தோம். இவர்கள், இப்போது ஓட்டைப் பைகளுடனே ரணிலுடன் இணைந்துள்ளனர். வாக்காளர்கள் எம்முடனே உள்ளார்கள். ஆறு தடவைகள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் எதையும் செய்யவில்லை. நான்கு வருடங்களில் சஜித் பிரேமதாச செய்தவை ஏராளம். இதனால், இவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. அந்த வெற்றியில் நாங்களும் பங்காளராவோம்" என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...