Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்! கிண்ணியாவில் ரிஷாத் பதியுதீன்! ( வீடியோ)

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 5:27 AM

மாற்றம் கோரும் தேசிய மக்கள் சக்தி முதலில் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்! கிண்ணியாவில் ரிஷாத் பதியுதீன்! ( வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர்; இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (15) கிண்ணியாவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
  • நீதிமன்றங்களுக்குச் சென்று ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள்.
  • வடக்கில் 75 பள்ளிவாசல்களைப் புனரமைத்தோம்.
எழுத்து அளவு:

மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர்; இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (15) கிண்ணியாவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற இக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது;

"மாற்றம் வேண்டுமென தேசிய மக்கள் சக்தியினர் கூறித்திரிகின்றனர். இவ்வாறு கூறுவோர் முதலில் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். எம்.பிமார்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போகிறார்களாம். ஊழல்களை ஒழிக்கப்போகிறார்களாம். கள்வர்களைக் கைது செய்யப்போகிறார்களாம். நான் ஒன்றைக் கூறுகிறேன். தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர் பெறும் ஓய்வூதியத்தை முதலில் நிறுத்துங்கள். கள்வர்களைக் கைது செய்வதற்கு சட்டம், பொலிஸ், குற்றவியல் திணைக்களங்கள் உள்ளன. அங்கே சென்று உரியவர்களைப் பற்றி முறையிடுங்கள். நீதிமன்றங்களுக்குச் சென்று ஊழல்வாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுங்கள். இவற்றை எல்லாம் செய்யாமல், ஜனாதிபதியாக்கினால்தான், இதைச்செய்யலாம் என்பது வேடிக்கையே.

ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெற்ற வீசா ஊழல்களை ரவூப் ஹக்கீம், சுமந்திரன் மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரே வழக்காடி நிறுத்தினர். புற்றுநோய் மருந்து மோசடியில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைதாவதற்கு பொதுமக்களே நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இவற்றைத் தடுக்க தேசிய மக்கள் சக்தியினர் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையே ஏன்?

எவற்றையுமே செய்யாத இந்த தேசிய மக்கள் சக்தியினர்தான், முஸ்லிம்களுக்காக நாங்கள் எதையும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். வடக்கில் 75 பள்ளிவாசல்களைப் புனரமைத்தோம். 25ஆக இருந்த பாடசாலைகளை 99 பாடசாலைகளாக அதிகரித்து, பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டுக்கு உதவியது நாங்களே. இருபதாயிரம் குடும்பங்களை மீளக்குடியமர்த்தியதும் நாங்களே. ஆனால், இவர்கள் எதுவுமே செய்யாமல், இன்று வாக்குகளுக்காக வேறு வேசத்துடன் எம்மக்களை வேட்டையாட வந்துள்ளனர்" என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...