Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அடித்துக் கொலை!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2024 • 3:52 AM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பிரதான அமைப்பாளர் அடித்துக் கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
  • முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் தலையில் தடியால் தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த சம்பத் கமகே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
  • ஹோமாகம, பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

காலி ஹினிதும தொகுதியின் பிரதான அமைப்பாளராக இருந்த சம்பத் கமகே, அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஹோமாகம, பனாகொட சமகி மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர்.
 
மேலும், திருமணத்துக்குப் புறம்பான உறவு குறித்த விடயங்களும் வெளியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
 
முச்சக்கரவண்டியில் வந்த நபரொருவர் தலையில் தடியால் தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த சம்பத் கமகே ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
கொலையை செய்த சந்தேக நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
 
உயிரிழந்தவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி ஹினிதும தொகுதியின் பிரதம அமைப்பாளராக இருந்தவர் என்றும் இரண்டு வாரங்களுக்கு முன்னர்சஜித் பிரேமதாசவை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்ததாகவும் நுகேகொட பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளர் அடித்துக் கொலை! | Tamil Leader | We Lead the Nation