Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

தமிழரசுக் கட்சி இரண்டாக பிரிந்து நிற்பது வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சங்கடத்தை தருகிறது! - ஜெயசிறில்

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2024 • 1:19 PM

தமிழரசுக் கட்சி இரண்டாக பிரிந்து நிற்பது வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சங்கடத்தை தருகிறது! - ஜெயசிறில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
  • தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.
  • எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:
வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் இலங்கை  தமிழரசுக் கட்சியின் காரைதீவு முக்கியஸ்தருமான கிருஸ்ணபிள்ளை  ஜெயசிறில் தெரிவித்தார்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றபோது கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் அவர் தெரிவித்ததாவது,
 
தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சங்கடங்களை தருகிறது. தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகிறார்கள்.
 
இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.
 
எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.எனவே  எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது  சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகுக்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழரசுக் கட்சி இரண்டாக பிரிந்து நிற்பது வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு சங்கடத்தை தருகிறது! - ஜெயசிறில் | Tamil Leader | We Lead the Nation