Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

ஜனாஸா எரிப்பை கண்டு கொள்ளாத அநுர இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - அமீர் அலி

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2024 • 11:54 AM

ஜனாஸா எரிப்பை கண்டு கொள்ளாத அநுர இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - அமீர் அலி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிப்பதை தடுக்க முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளியிட்ட போது எங்களோடு இணைந்து குரல் கொடுத்தவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசா என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
  • அன்று அவ்வாறு சொன்ன அநுர தற்போது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி இந்தப் பிரதேசத்தில் வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
  • ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
எரிப்பதை தடுக்க முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பை வெளியிட்ட போது எங்களோடு இணைந்து குரல் கொடுத்தவர்தான் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசா என முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
 
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசாவை ஆதரித்து ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
 
பெரும்பான்மைக் கட்சித் தலைவர்கள், சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோருமே சொன்னார்கள் ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம். அது தாங்கிக் கொள்ள முடியாத வேதனை. அது முஸ்லிம் சமூகத்துக்குச் செய்யும் பெரியதொரு அநியாயம் என்று கூறினார்கள்.
 
ஆனால், பாராளுமன்றத்தில் ஜே.வி.பி தலைவர் அநுர குமார திஸானாயக்க ஜனாஸாக்களை எரிப்பதா? இல்லையா? என்று எங்களால் ஒன்றும் சொல்ல முடியாது.
 
அரசாங்கம் எரிப்பது என்று தீர்மானித்தால் அதற்கு எங்களுக்கு தடையில்லை என்று சொன்னவர்தான் அவர்.
 
அன்று அவ்வாறு சொன்ன அநுர தற்போது வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக வேண்டி இந்தப் பிரதேசத்தில் வந்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.
 
அவருக்கு பின்னால் இளைஞர்களும், போராளிகளும் திறிகிறார்கள் என்றால் எங்கோ ஒரு பிரச்சினை இருக்கிறது.
 
ஜே.வி.பி. சொல்கிறார்கள் இந்த நாட்டிலுள்ள எல்லோருமே கள்ளர்கள் என்று. அவர்களை விட வல்லவர்கள் யாருமில்லை என்று சொல்கின்றனர்.
 
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு அவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்று கனவு காண்கின்றார்கள்.
 
சில இளைஞர்கள் அவர்களின் சதி வலைக்குள் சிக்கியுள்ளனர்.
 
அரசியல் தலைவர்களுக்கிடையில் ஒரு அச்சமிருக்கிறது சஹ்ரான் மூளைச்சலவை செய்யப்பட்டு எப்படி ஒரு குண்டுதாரியாக வந்து முஸ்லிம் சமூகத்தை தலைகுணிய வைக்க அவனுக்கு தெரியாமலே அந்த வேலைத்திட்டம் செய்யப்பட்டதோ அது போல நமது இளைஞர்கள் வழிகெட்டு விடுவார்களோ என்ற அச்சம் எங்களிடத்தில் இல்லாமல் இல்லை.
 
அதனால்தான் நாங்கள் உங்களிடத்தில் சொல்கிறோம். நீங்கள் மிகவும் சிந்தனையோடு செயல்பட வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
 
இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை கட்சிகள் சிறுபான்மாக் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து சஜித் பிரமதாசாவுக்கு வாக்களிக்குமாறு  சொல்கிறோம். என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...