Tamil Leader News
முக்கியம்
வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●
செய்திகள்

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்! மட்டக்களப்பில் ரிஷாத் எச்சரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2024 • 11:03 AM

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்!  மட்டக்களப்பில் ரிஷாத் எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (15) மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
  • இதை மலினப்படுத்துவதற்காகவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரியநேந்திரனை பேரினவாதம் களமிறக்கியுள்ளது.
எழுத்து அளவு:

வெற்றி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை (15) மட்டக்களப்பில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,

"ஊழல்வாதிகளையும் இனவாதிகளையும் தோற்கடிப்பதற்காகவே, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம். தமிழ்மொழி பேசும் சிறுபான்மைச் சமூகங்களின் தலைமைகளும் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கின்றன. மலையகக் கட்சிகள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ்,முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இனவாதத்தைத் தோற்கடிக்க ஒன்றுபட்டுள்ளன.

கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நடந்த கூட்டங்களில் பங்கேற்றுவிட்டுத்தான் மட்டக்களப்பு கூட்டத்துக்கு வந்தேன். அதிகளவான தமிழ் மக்கள் அக்கூட்டங்களில் பங்கேற்றிருந்தனர். இலங்கை தமிழரசுக் கட்சியும் சஜித் பிரேமதாசவையே ஆதரிக்கிறது. இதனால், அமோகமான தமிழ் வாக்குகள் சஜித்துக்கே கிடைக்கவுள்ளன. இதை மலினப்படுத்துவதற்காகவே இம்மாவட்டத்தைச் சேர்ந்த அரியநேந்திரனை பேரினவாதம் களமிறக்கியுள்ளது.

நமது இருப்புக்கள், பாதுகாப்பு மற்றும் உரிமைகளை ஒருசில ரூபாக்களுக்காக விற்க முடியுமா? எனவேதான், நிதானமாகச் சிந்திக்குமாறு கோருகிறோம். கடந்த தேர்தலிலும் எமது ஆலோசனைகளைப் புறக்கணித்து, ஒருசிலர் கோட்டாபயவுக்கு ஆதரவளித்தனர். என்ன நடந்தது? நடந்தவற்றை நினைத்துப்பாருங்கள்.

ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை ஒப்படைக்கப் பொருத்தமானவர் யார்? சிறுபான்மைத் தலைமைகள் எல்லாம் சஜித்தை ஆதரிப்பது ஏன்? எதிர்க்கட்சித் தலைவரான இவரது சேவைகள் நாடு முழுவதும் வியாபித்துள்ளன. இந்த நம்பிக்கையோடுதான் நாம் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கிறோம்" என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்க முகவர்கள் களமிறக்கம்! மட்டக்களப்பில் ரிஷாத் எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation