Tamil Leader News
முக்கியம்
6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●யாழ்ப்பாணத்துக்கும் விரிவுபடுத்தப்படும் மெட்ரோ சொகுசு பஸ் சேவை!●கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 3 பௌத்த தேரர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்!●கப்பலிலிருந்து சமுத்திரத்தில் விழுந்த இசைக்கலைஞர் 9 மணி நேரத்தின் பின் மீட்பு!●குவாண்டாஸ் நிறுவனம் 850 தகவல் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை வெளிப்படை ஆட்களுக்கு வழங்குகிறது!●மாத்தளை கூட்டு மனிதப் புதைகுழி விசாரணைகளை மீளத் திறப்பதற்காக விண்ணப்பம்!●NDBஇன் ரூ. 13 பில்லியன் நிதி இடைவெளி: நாட்டின் வங்கி முறைமைக்கு முன்னால் ஒரு கடுமையான பரிசோதனை!●
செய்திகள்

இஷாக் ரஹ்மானின் ஆதரவாலேயே ராஜபக்க்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன! - ரிஷாத் பதியுதீன்

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2024 • 9:04 AM

இஷாக் ரஹ்மானின் ஆதரவாலேயே ராஜபக்க்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன! - ரிஷாத் பதியுதீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கிறோம்' என கோட்டாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பிக்கள் துணைபோனதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
  • ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரத்தில் (11) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது, "நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவ்வூரில் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
  • கொரோனா ஜனாஸாக்களை எரித்து சந்தோசம் அடைந்தவர்களுடனேயே, இஷாக் ரஹ்மான்இணைந்துள்ளார்.
எழுத்து அளவு:

முஸ்லிம் எம்.பிக்கள் இருக்கிறோம்' என கோட்டாபய ராஜபக்ஷவின் அத்தனை அநியாயங்களுக்கும் தம்மை விட்டுச்சென்ற எம்.பிக்கள் துணைபோனதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து அனுராதபுரத்தில் (11) நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது,

"நீண்ட நாட்களுக்குப் பின்னர் இவ்வூரில் பேசக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முதலில் இறைவனுக்கும் இரண்டாவதாக ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

நமது வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு வந்த இஷாக் ரஹ்மான், எமது சமூகத்துக்கு எதிரான கோட்டாபயவின் கொடூரச் செயல்களைக் கை கட்டிப் பார்த்து நின்றார். அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு இவர்கள் ஆதரவளித்ததால்தான், ராஜபக்ஷக்களின் கொடிய கரங்கள் மேலோங்கின.

அரசியலில் அவரை ஆதரிக்கவில்லை என்பதற்காக எமது சமூகத்தைப் பழிவாங்கினர். முஸ்லிம்களின் சொத்துக்களை அழித்தனர். வியாபார நிலையங்களுக்குத் தீ வைத்தனர். கொரோனா ஜனாஸாக்களை எரித்து சந்தோசம் அடைந்தவர்களுடனேயே, இஷாக் ரஹ்மான்இணைந்துள்ளார். இதனால்தான், எமது கட்சியின் மூன்று எம்.பிக்களையும் நீக்கினோம். இவர்களை ஒருபோதும் இணைக்கப் போவதில்லை. எனவே, இவர்களைத் தோற்கடிக்க ஒன்றுபடுங்கள்.

நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனான சஜித் பிரேமதாச, தனது தந்தையைப் போன்று நேர்மையானவர். ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கினார். ஜனசவியத் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களுக்கு வாழ்வளித்தார்.

எனவே, சஜித்தின் வெற்றிக்கு உறுதுணையாகச் செயற்படுங்கள். "இன்ஷா அல்லாஹ்" வெற்றி விழாக் கொண்டாட்டத்தில் சந்திப்போம்" என்று கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இஷாக் ரஹ்மானின் ஆதரவாலேயே ராஜபக்க்ஷக்களின் கொடிய கரங்கள் பலப்பட்டன! - ரிஷாத் பதியுதீன் | Tamil Leader | We Lead the Nation