Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதகமான நிலையில்

T

The Leader Desk

ஜூலை 27, 2023 • 8:46 AM

இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதகமான நிலையில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • ஆம் ஆண்டில், இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக இந்தியா 142 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுகிறது.
  • அத்துடன் எதிர்காலத்திலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் இந்தியா இலங்கைக்காக செயற்பட வேண்டும் என்றும் அந்த குழு மேலும் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

இலங்கையின் திட்டங்களில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என இந்திய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.

நெருக்கடியான காலங்களில் இந்தியா, இலங்கைக்கு கடன் மற்றும் நிதி நடவடிக்கைகளை வழங்கும் போது இலங்கைக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இந்திய மக்களவையின் வெளியுறவுக் குழு, 'இந்தியாவின் அயலவருக்கு முன்னுரிமை' என்ற கொள்கை தொடர்பான அறிக்கையில் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இலங்கையில் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டாளராக இந்தியா 142 மில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது என்று இந்தக் குழு சுட்டிக்காட்டுகிறது.

இலங்கையில் எரிசக்தி, பெருந்தோட்டம், துறைமுகங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கனிமங்கள், மற்றும் உற்பத்தித் துறைகளில் இந்திய பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்தி மற்றும் புதிய திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் ஆராய வேண்டும் என மேலும் அந்த குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடனை அங்கீகரிப்பதற்கும்  மறுசீரமைப்பு செயல்முறைகளுக்கு இந்தியா உதவியமையக்கும் பாராளுமன்ற வெளிநாட்டு சேவைக் குழுவால் பாராட்டப்பட்டது.

அத்துடன் எதிர்காலத்திலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நாடுகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதில் இந்தியா இலங்கைக்காக செயற்பட வேண்டும் என்றும் அந்த குழு மேலும் பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தியாவுடன் தற்போதுள்ள உறவுகளை மேம்படுத்த பல கட்டங்கள் அடங்கிய வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாட்டுக்கு வருகை தந்த அதானி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதானி நிறுவனம் மேற்கொண்டுள்ள முதலீடுகள் மற்றும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் சோலார் பேனல் திட்டம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கையின் சுற்றுலா வர்த்தக நாம தூதுவர் சனத் ஜயசூரியவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...