Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி நேர்மையாக இருக்க வேண்டும்

T

The Leader Desk

ஜூலை 27, 2023 • 3:22 AM

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி நேர்மையாக இருக்க வேண்டும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும்.
  • வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஜனாதிபதி கேட்கின்றார்.
  • இதன் போது ஜனாதிபதியின் வகிபாகம் அதற்கான அர்ப்பணிப்புமிக்கதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கமேயன்றி வேறில்லை என்பது மிகத்தெளிவாகும்.

இதன் போது ஜனாதிபதியின் வகிபாகம் அதற்கான அர்ப்பணிப்புமிக்கதாகவும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும்.

வடக்கு, கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை. பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

இருப்பினும் இப்பிரச்சினைக்கு இதுவரை எவராலும் நடைமுறை ரீதியான தீர்வை முன்வைக்க முடியவில்லை. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிக முக்கியமான காரணி நல்லெண்ணத்துடன் செயற்படுவதே ஆகும்.

ஜனாதிபதியின் இந்த முயற்சியானது குறுகிய கால அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்கான வேலைத்திட்டமேயன்றி உண்மையான விருப்பத்துடன் முன்வைக்கப்படும் நேர்மையான நடைமுறைப்படுத்தல் அல்ல என்பதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு முன்னரும் தற்போதைய ஜனாதிபதிக்கு இப்பிரச்சினை தொடர்பில் தலையிட்டு தீர்வுகளை வழங்குவதற்கு பல சந்தர்ப்பங்கள் இருந்தமை இரகசியமல்ல.

அத்துடன் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடமாகியும் இப்பிரச்சினைக்குத் தீர்வுகளை வழங்குவதற்கான நியாயமான அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அவர் ஈடுபடவில்லை.

கடந்த சுதந்திர தினத்திற்கு முன்னர் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண தன்னிடம் தீர்வு இருப்பதாக நாட்டுக்கு உணர்த்திய ஜனாதிபதி, குறுகிய கால அரசியல் இலாபங்களை பெற்றுக் கொள்ள இப்பொழுது முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும். இவ்வாறான சூழலில் வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியுமா என்பது சந்தேகமே.

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சியிடம் ஜனாதிபதி கேட்கின்றார். ஆனால் நடக்க வேண்டியது என்னவெனில் அரசாங்கம் ஒரு பிரேரணையை சமர்ப்பித்து அதற்கான பதிலை பெற்றுக்கொள்ள வேண்டுமேயன்றி அவ்வாறான பிரேரணை இல்லாத நிலையில் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது? இப்பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதிக்கு உண்மையான விருப்பம் இருந்தால், அவர் செய்ய வேண்டியது அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்பினருடனும் சேர்ந்து இணங்கிய பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டும். இது அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

அவ்வாறான பிரேரணை இல்லாத நிலையில் அரசாங்கத்தின் நிலைப்பாடும் தெளிவில்லாமல் உள்ளது. அரசாங்கத்தின் முன்மொழிவுகள் மற்றும் நிலைப்பாட்டை அறிவிக்காமல் எதிர்க்கட்சியிடம் கருத்துக்களைக் கேட்பது அர்த்தமற்றது.

அரசாங்கம் முன்மொழிந்த பின்னர் எதிர்க்கட்சி தனது பொறுப்புகளை நிறைவேற்ற தயாராக உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம்.

மேலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான இன்றியமையாத அடிப்படை விடயம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சபைகளை உடனடியாக ஜனநாயக ரீதியாக நிறுவுவது ஆகும்.

அதிகாரப் பரவலாக்கல் நடவடிக்கைக்காக ஜனநாயக ரீதியில் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் யோசனைகளையும் பெறுவது மிகவும் முக்கியமானதும் இன்றியமையாததுமாகும்.

தற்போது நான்கரை ஆண்டுகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் கூட இல்லாது மாகாண சபையானது நிறைவேற்று அதிகாரத்தினால் வழிநடத்தப்பட்டு வருகின்றது.

இதனால் ஜனநாயகம் சீரழிந்து போயுள்ளதுடன் அதிகாரப்பகிர்வு தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு பிரதான தடையாகவும் இது மாறியுள்ளது.

எனவே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணத் தேவையான கலந்துரையாடல்களை நடத்துவதற்கு ஏதுவாக ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாகாண சபைகளும் நிறுவப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி நேர்மையாக இருக்க வேண்டும் | Tamil Leader | We Lead the Nation