Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

டுவிட்டரில் புதிய மாற்றம்

T

The Leader Desk

ஜூலை 24, 2023 • 8:14 AM

டுவிட்டரில் புதிய மாற்றம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.
  • தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
  • கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.
எழுத்து அளவு:

அனைருக்கும் பழகி போன ஒன்றாகிவிட்டது. 

டுவிட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து டுவிட்டர் தளத்தில் எலான் மஸ்க் ஏராளமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் 

அந்த வரிசையில், தற்போது டுவிட்டர் தளம் விரைவில் ரிபிரேண்ட் செய்யப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். 

அதன்படி டுவிட்டர் தளம் X என்ற பெயரில் ரிபிரேண்ட் செய்யப்படுகிறது. 

இது எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று எலான் மஸ்க் அறிவித்து இருக்கிறார். 

புதிய மாற்றம் விரைவில் அமலுக்கு வர இருப்பதை அடுத்து, பயனர்கள் புதிய லோகோவுக்கு தயாராகும் படி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

இதைத் தொடர்ந்து X.com என்ற வலைதள முகவரியை க்ளிக் செய்தால், தற்போது டுவிட்டர் தளத்திற்கு செல்கிறது.

twitter.com வலைதள முகவரியும் x.com என்று மாற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இதோடு டுவிட்டர் தளத்துக்கான புதிய லோகோ இப்படித் தான் காட்சியளிக்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

மற்றொரு டுவிட்டர் பதிவில் எலான் மஸ்க் புதிய டுவிட்டர் லோகோவை வெளியிட்டுள்ளார்.


எலான் மஸ்க் மட்டுமின்றி டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரியான லிண்டா யோக்கரினோவும், X பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பகிர்ந்து வருகிறார். 

மேலும் X லோகோவை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து இருக்கிறார். இது குறித்த டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது."வாழ்க்கையோ அல்லது வியாபாரமோ, பெரிய மாற்றத்தை ஏற்படுத்த இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான காரியம் ஆகும். ஒருமுறை டுவிட்டர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, தகவல் பரிமாற்ற முறையை அடியோடு மாற்றியது. தற்போது X இதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும். கடந்த 8 மாதங்களாக X வடிவம் பெற்று வருகிறது, ஆனால் இது வெறும் ஆரம்பம் மட்டும் தான்," என்று தெரிவித்தார்.

இதோடு X எல்லாவற்றுக்குமான செயலியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். X-ஐ உலகிற்கு கொண்டுவருவதற்கான பணிகளில் டுவிட்டர் பணியாற்றி வருகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.",

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...