Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

T

The Leader Desk

ஜூலை 21, 2023 • 4:19 AM

முறைப்பாடுகளை ஏற்க பொலிஸார் மறுத்தால் உடன் அறியத் தரவும்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
  • அத்துடன் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான அதாவது குறைந்த பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
  • எனது தொலைபேசி இலக்கமான 0718591340 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்.
எழுத்து அளவு:

சீ.பி.விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் சிரேஸ்ட அத்தியட்சகருக்கும் இடையில் வவுனியாவின் தற்போதைய நிலமைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அத்தியட்சகரின் காரியாலயத்தில் இடம்பெற்றிருந்தது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இருப்பினும் வவுனியா மாவட்டத்தில் சில பொலிஸ் நிலையங்களில் பொதுமக்களின் பல முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுப்பதாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அத்துடன் திருட்டு சம்பவங்கள் பற்றி பொதுமக்கள் பொலிஸாரிடம் முறையிடும் போதும் ஒரு சில பொலிஸார் அதன் உண்மையான பெறுமதிகளை மறைத்து தவறான அதாவது குறைந்த பெறுமதிகளை முறைப்பாட்டில் பதிவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாறு செயல்படும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது போன்ற சம்பவங்கள் வவுனியாவில் இடம்பெற்றால் பொதுமக்கள் உடனடியாக எனக்கு அறியத்தரவும். எனது தொலைபேசி இலக்கமான 0718591340 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் முறைப்பாடு செய்ய முடியும்.

வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் பதில் அளிக்காத சந்தர்ப்பத்தில் குறித்த தொலைபேசிக்கு தன்னால் மீள தொடர்பு ஏற்படுத்தப்பட்டு முறைப்பாடு பெறப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



-வவுனியா தீபன்-

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...