Tamil Leader News
முக்கியம்
மின்னேரியா விபத்தில் விசேட வைத்திய நிபுணர் மரணம்!●எரிபொருள் வரிச் சுமையும் விநியோக நெருக்கடியும்: உண்மை நிலை என்ன?●தீபாவளியை முன்னிட்டு தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு திங்களன்று விடுமுறை!●தேயிலை - தேங்காய் டிஜிட்டல் மயமாக்கலால் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமா?●சில மணிநேரக் கனமழையால் கொழும்பு முடங்கிய விந்தை!●நுவரெலியா அஞ்சல் கட்டிடம் சுற்றுலா மையமாகிறது: பொதுமக்களின் பணத்திற்கு நீதி கிடைக்குமா?●இலங்கையின் நீல நண்டுக்கு உலகளாவிய சான்றிதழ்: ஆசியாவுக்கே முன்னுதாரணம்!●டயர் தரக் கட்டுப்பாட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டாலும் பரிசோதனை வசதிகளின்றி நெருக்கடி!●ABU மாநாட்டின் மூலம் சுற்றுலாத்துறைக்குக் கிடைத்த உலகளாவிய வாய்ப்பு!●உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் சரிவு: பிணைமுறைகளை நோக்கி முதலீட்டாளர்களின் கவனம்!●
செய்திகள்

எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை

T

The Leader Desk

ஜூலை 21, 2023 • 4:18 AM

எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

கொண்டு வந்தாலும் இறுதியில், இந்நிறுவனங்களில் பணியாற்றும் சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற அதிகாரிகள் அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமல், மக்கள் பக்கம் இருந்து சிந்தித்து செயல்படும் போது சிறப்புரிமைக் குழுக்களுக்கு அவர்கள் அழைக்கப்படுவதாகவும், இந்த சிறப்புரிமைக் குழுக்கள் தெரிவுக் குழுக்களின் ஊடாக அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் உயர்ந்து காணப்படும் வரை இந்த சட்டமூலங்கள் எதுவும் பலனளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் நட்புவட்டார முதலாளித்துவம் மற்றும் நட்புவட்டார அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இதன் ஊடாக இந்த ஊழல் அரசியல் கலாசார கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு 220 இலட்சம் மக்களினதும் புதிய ஆணையுடன் நாட்டுக்கு பொறுப்புக்கூறும் தூய அரசியல் கலாசார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தேர்தல்களில் தமது பிரசார நடவடிக்கைகளுக்கு பணத்தைச் செலவழித்த நட்பு வட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வரிச்சலுகைகள் வழங்கியதால், சீனி மோசடிகள், தேங்காய் எண்ணெய் மோசடிகள், எரிவாயு மோசடிகள், மருந்துப்பொருட்கள் மோசடிகள் போன்ற மோசடிகள் நாட்டில் கடந்த காலங்களில் இடம் பெற்றதாகவும், மல உரக்கப்பலில் கூட லட்சம் வாங்கிய இவர்களால் 2048 இல் கூட நாட்டை மீட்க முடியாது என்றும், இதற்கு புதிய அரசியல் ஆணை தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தவே இவ்வாறான சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்திற்கு திருடர்களைப் பிடிக்கவோ, பண்டோரா பத்திர மோசடிக்காரர்களை பிடிப்பதற்கோ, நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட தேசிய வளங்களை நாட்டுக்குத் திரும்பப் பெறுவதற்கோ விருப்பமில்லை என்றும், ஜனாதிபதி ரணில் ராஜபக்ச அல்ல ரணில் விக்கிரமசிங்கவே என்பதை நிரூபிக்க நாட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் வளங்கள் நாட்டுக்கே திருப்பி எடுக்கவும் திருடர்களை பிடிக்கவும் வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (20) இடம்பெற்ற மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எத்தகைய சட்டமூலங்கள் கொண்டு வரப்பட்டாலும் பிரயோசனமில்லை | Tamil Leader | We Lead the Nation