Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

வடமாகாண மக்கள் தேசிய அடையாள அட்டை பெற விசேடத் திட்டம்

T

The Leader Desk

ஜூலை 20, 2023 • 3:23 AM

வடமாகாண மக்கள் தேசிய அடையாள அட்டை பெற விசேடத் திட்டம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
  • இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஒருநாள் வேலைத்திட்டத்திற்கு விண்ணபிப்பவர்களின் வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
  • ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒருநாள் சேவையில் பெற்றுக்கொண்ட விண்ணப்பங்கள் 4968 ஆகும்.
  • மொத்த விண்ணப்பங்கள் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 596 ஆகும்.
எழுத்து அளவு:

பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதில் வடக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், நாடளுமன்றின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள ஒருநாள் வேலைத்திட்டத்திற்கு விண்ணபிப்பவர்களின் வீதம் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

2023 ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒருநாள் சேவையில் பெற்றுக்கொண்ட விண்ணப்பங்கள் 4968 ஆகும். மொத்த விண்ணப்பங்கள் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 596 ஆகும். இது நூற்றுக்கு 4 சதவீதம் ஆகும்.

விசேட தேவையின் நிமித்தம் மாத்திரமே அடையாள அட்டையை பெற்றுக்கொள்பவர்கள் பிரதான அலுவலகத்திற்கு செல்ல முடியும். வவுனியா ஆட்பதிவு திணைக்களத்தில் இன்றும் சேவைகள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன.

இருப்பினும் ஒருநாள் சேவையை வவுனியா ஆட்பதிவு திணைக்களத்தில் பெற்றுக்கொள்ள இடவசதி போதாமல் காணப்படுகின்றது. இதற்காக வேறு ஒரு இடத்தை ஆட்பதிவு திணைக்களத்திற்காக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...