Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

'மன்னிக்கவும், நாம் அந்த வலையில் சிக்க மாட்டோம்'

T

The Leader Desk

ஜூலை 19, 2023 • 5:40 PM

'மன்னிக்கவும், நாம் அந்த வலையில் சிக்க மாட்டோம்'   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வலதுசாரி தீவிரவாதத்திற்குள் செல்லாமல் மூன்றாவது பரிமாணத்தில், அரசியலில் மூன்றாவது பாதையில், அதாவது புதிய பாதையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து அதிகாரத்தை பிரயோகிக்கும் நோக்கத்தில் மக்கள் செயற்படுகின்றனர் என்பதை முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்துகிறது.
  • 'மாளிகைகளை கதிகலங்க செய்த போராட்டங்கள்' என்ற தொனிப் பொருளிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது.
  • இதன் போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இந்த நூல் பக்க சார்பானது.
எழுத்து அளவு:

வலதுசாரி தீவிரவாதத்திற்குள் செல்லாமல் மூன்றாவது பரிமாணத்தில், அரசியலில் மூன்றாவது பாதையில், அதாவது புதிய பாதையில் அரசியல் பயணத்தை ஆரம்பித்து அதிகாரத்தை பிரயோகிக்கும் நோக்கத்தில் மக்கள் செயற்படுகின்றனர் என்பதை முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்துகிறது.

"நாம் சிறிய தவறு ஒன்றை செய்தால் அதை வைத்து எம்மை சிக்க வைக்கவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். ஆனால், நாம் பல காலங்களுக்கு முன்னாலேயே 'மன்னிக்கவும், நாங்கள் அந்த வலைக்குள் சிக்க மாட்டோம்' என்று தெரிவித்து விட்டோம். நாம் மக்களை நிர்வகிக்கின்றோம். தேர்தலுக்கு மத்தியிலும் போராட்டங்களுக்காக மக்களுடன் முன் வருகிறோம். பாராளுமன்றத்துக்குள் போராட்டங்களை நடத்தவும் நாங்கள் தயங்க மாட்டோம்" என்று முன்னிலை சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குனரட்டினம் தெரிவித்துள்ளார்.

'மாளிகைகளை கதிகலங்க செய்த போராட்டங்கள்' என்ற தொனிப் பொருளிலான நூல் வெளியீட்டு விழா கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று (ஜூலை 18) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், "இந்த நூல் பக்க சார்பானது. மக்களுக்கானது. அதேபோன்று போராட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டங்களை வகுப்பதற்கு சார்பானது" என்றார்.

"கடந்தாண்டு இடம்பெற்ற போராட்டத்தின் பங்காளர்களாக நாமும் இருந்தோம். பல்வேறு கட்சிகள் அரசியல் குழுக்கள் நபர்களின் ஒன்று திரட்டல்கள் தனிமனித பங்களிப்பு என மாபெரும் மக்கள் கூட்டம் கலந்து கொண்ட போராட்டமாகவே அது காணப்பட்டது.

"இந்தப் போராட்டத்தின் போது தனிப்பட்ட ரீதியில் காணப்பட்ட பல்வேறு சவால்கள் எச்சரிக்கைகள் அச்சுறுத்தல்கள் போன்றவற்றையெல்லாம் மறந்து பாரிய அர்ப்பணிப்புடன் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர் தியாகங்களை செய்தவர்களும் இருந்தனர். அவ்வாறானவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது. அதேபோன்று போராட்டங்களின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது, எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன? அதற்காக நாம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பான விளக்கங்களும் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன" என்று குமார் குணரட்ணம் மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...