Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

வேற்றுக்கிரகவாசிகளிடம் தமிழர் பிரச்சினை

T

The Leader Desk

ஜூலை 19, 2023 • 10:49 AM

வேற்றுக்கிரகவாசிகளிடம் தமிழர் பிரச்சினை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • டக்ளஸ் தேவானந்தா, எதிர் காலத்தில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
  • பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான விவாதம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
  • அன்று அதனை எதிர்த்த ஏனைய தமிழ் அரசியல்வாதிகள், இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையை காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.
எழுத்து அளவு:

டக்ளஸ் தேவானந்தா, எதிர் காலத்தில் வேற்றுக்கிரக வாசிகளும் தலையிட வேண்டும் என்று சக தமிழ் தலைமைகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற பலஸ்தீன விவகாரம் தொடர்பான விவாதம் தொடர்பாக கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில்,

'மனித உரிமை மீறல்கள் தொடர்பாக பிரஸ்தாபிக்கின்ற சர்வதேச ரீதியான அமைப்புக்கள் எவையும் பலஸ்தீனம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிராக எந்த விதமான கருத்துக்களும் தெரிவிக்காமல் இருந்து வருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்ற நிலையில், எமது தமிழ்த் தரப்பு அரசியல்வாதிகள் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் முறைப்பாடுகளை முன் வைத்துள்ளதாகத் தெரிய வருகின்றது.

இலங்கையில் மழை பெய்தாலும் சர்வதேசம் குடைபிடிக்க வேண்டும் எனக் கூக்குரலிடுகின்ற இந்தத் தமிழ் அரசியல் தரப்பினருக்கு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் நல்லதொரு பதிலை வழங்கியதாகவும் - அதாவது 'அனைத்துக்குமே சர்வதேசம், சர்வதேசம் எனக் கூறிக் கொண்டு எதிர்பார்த்துக் கொண்டிருக்காதீர்கள். சர்வதேசத்திற்கும் சில வரையறைகள் உள்ளன' எனக் கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் இனிமேல், எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேற்றுக் கிரக வாசிகள் தலையிட வேண்டும் எனக் கோரினாலும் நாம் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

'அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்' என்பது போல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையே நான் காலகாலமாக வலியுறுத்தி வருபவன்.

அன்று நான் எதைச் சொன்னேனோ அதுவே இப்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. அன்று அதனை எதிர்த்த ஏனைய தமிழ் அரசியல்வாதிகள், இன்று அதனை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையை காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

ஆனால், அன்று அவர்கள் எதிர்த்தமைக்கும், இன்று அவர்கள் ஆதரிப்பதற்கும் சுயலாப உள் நோக்கம் காரணமாக இருக்கின்றதே அன்றி, அதில் உண்மைத் தன்மை - நேர்மை எதுவும் இல்லை என்பதையும் நான் சுட்டிக் காட்ட வேண்டும்.

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நல்லிணக்கம் என்பதை வெறும் வார்த்தையில் மாத்திரம் வரையறுத்துக் கொள்ளாமல், அதனை செயலில் காட்டுவதற்கு எப்போதுமே தயாராக உள்ளவர்.

அந்த வகையில், அவர் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கின்ற இக்கால கட்டம் ஒரு அரிய வாய்ப்பாகும். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் இத்தகையதொரு சந்தர்ப்பம் இனி வாய்க்கும் என்பதை உறுதியாகக் கூற இயலாது.

எமது மக்களின் பிரச்சினைகளை, எமது பகுதிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்கின்ற உண்மையான அக்கறை காரணமாகவே அவர் அனைத்து தமிழ்க் கட்சிகளினதும் பிரதிநிதிகளை அடிக்கடி அழைத்து கலந்துரையாடி வருகின்றார்.

கௌரவ ஜனாதிபதி அவர்களின் அழைப்பினை ஏற்று, அவருடன் கலந்துரையாடிவிட்டு, வெளியில் வந்ததும் ஊடகங்களுக்காக 'இது சாத்தியப்படாது, அது சாத்தியப்படாது' என அபசகுனமாகக் கூறிக் கொண்டிராமல், நாங்கள் முன் வைக்கின்ற விடயங்களை செயல் படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளையும் நாம் கையாள வேண்டும்.

அது தான் உண்மையான மக்கள் பிரதிநிதி ஆற்ற வேண்டிய பொறுப்பாகும்.' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...