Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் இலங்கை நிறுவனங்கள்

T

The Leader Desk

ஜூலை 19, 2023 • 10:47 AM

வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் இலங்கை நிறுவனங்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தீர்ப்பதற்காக வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களில் 8 இலங்கை வணிகப் பன்கூட்டுத்தாபனங்கள் கைச்சாத்திட்டுள்ளன.
  • சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) Efficient and Effective Justice (EEJ) நடவடிக்கையுடன் 8 நிறுவனங்கள் தனித்தனியாக கையெழுத்திட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விருத்தி செய்வதற்கு USAID உதவி செய்தது.
  • அந்நடவடிக்கையானது சர்வதேச மத்தியஸ்த நிபுணர்களால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக இந்நிறுவனங்களுக்கு வர்த்தக மத்தியஸ்தம் மற்றும் பிற ADR முறைகளில் பயிற்சி அளிக்கிறது.
எழுத்து அளவு:

தீர்ப்பதற்காக வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்களில் 8 இலங்கை வணிகப் பன்கூட்டுத்தாபனங்கள் கைச்சாத்திட்டுள்ளன.

வழக்குகள் தேங்குவதைக் குறைப்பதன் ஊடாக இலங்கை நீதிமன்ற கட்டமைப்பினை அதிக வினைத்திறன் உடையதாகவும் மற்றும் செயல்விளைவுள்ளதாகவும் மாற்றுவதற்கு இந்நகர்வு உதவி செய்யும்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) Efficient and Effective Justice (EEJ) நடவடிக்கையுடன் 8 நிறுவனங்கள் தனித்தனியாக கையெழுத்திட்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விருத்தி செய்வதற்கு USAID உதவி செய்தது.

நிறுவனங்கள் வர்த்தக மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சி, சர்வதேச தரத்திலமைந்த மத்தியஸ்தம் மற்றும் வர்த்தக மத்தியஸ்த சேவைகளுடனான நேரடி அனுபவம் ஆகியவற்றினைப் பெற்றுக் கொள்வதற்கு இவ் ஒப்பந்தங்கள் உதவுவதுடன் நிறுவனங்கள் தங்களது வர்த்தக ஒப்பந்தங்களில் மத்தியஸ்தம் தொடர்பான ஒரு ஷரத்தினை உள்ளடக்குவதற்கும் அந்நிறுவனங்களை அவை ஊக்குவிக்கின்றன.

வர்த்தக மத்தியஸ்தம் என்பது பிணக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு சாத்தியமான மாற்றுப் (ADR) பொறிமுறையாக அமைவதுடன் நாட்டில் முதலீடுகளையும் வர்த்தக அபிவிருத்தியினையும் ஊக்குவிப்பதற்கும் அது உதவி செய்யும்.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி, துடாவே பிரதர்ஸ் (தனியார்) லிமிடெட், ஏகேகே இன்ஜினியரிங், நவலோக்க கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், டில்மா சிலோன் டீ நிறுவனம், மாகா இன்ஜினியரிங் (தனியார்) லிமிடெட், ரணசிங்க கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் மற்றும் எம்ஏசி ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் கொழும்பில் அமைந்துள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் தமது ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.

இப்பங்காண்மைகள் USAID இனால் ஆரம்பிக்கப்பட்ட Efficient and Effective Justice நடவடிக்கையின் கீழ் தொடங்கப்பட்ட வர்த்தக மத்தியஸ்த முன்னோடி நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாகும்.

அந்நடவடிக்கையானது சர்வதேச மத்தியஸ்த நிபுணர்களால் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிப்பட்டறைகள் ஊடாக இந்நிறுவனங்களுக்கு வர்த்தக மத்தியஸ்தம் மற்றும் பிற ADR முறைகளில் பயிற்சி அளிக்கிறது.

இலங்கையில் ADR சேவைகளை மேம்படுத்துவதற்காக, மத்தியஸ்த மத்திய நிலையங்களை முகாமை செய்தல் மற்றும் நிர்வகித்தல் போன்ற விடயங்களில் ADR மத்திய நிலையங்களுக்கு இச்செயற்திட்டம் பயிற்சியளிக்கிறது.

“வழக்கு முகாமைத்துவம் மற்றும் நீதிமன்ற முகாமைத்துவம் ஆகிய விடயங்களில் சர்வதேச சிறந்த நடைமுறைகளைப் பின்பற்ற உதவுவதன் மூலமும், சட்டக் கல்வியை மேம்படுத்துதல் மற்றும் ADR பொறிமுறைகளைப் பயன்படுத்துவதை மேம்படுத்துதல் மற்றும் அதற்கு வசதி செய்து கொடுத்தல் ஆகியவற்றின் மூலமும், வழக்குகளில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் அவை நீதிமன்றங்களில் தேங்கிக்கிடத்தல் என்பன குறைவடைவதைக் காண்பதற்கும், மக்களை மையமாகக் கொண்ட நீதிக்கட்டமைப்பின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

” என USAID செயற்பணி இயக்குநர் அலி எசத்யார் கூறினார். “ஒரு வலுவான நீதிக்கட்டமைப்பானது சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது மட்டுமன்றி, அதற்கான அணுகலையும் எளிதாக்குகிறதென நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் கூறினார்.

2021 ஆம் ஆண்டு முதல், USAID இன் Efficient and Effective Justice நடவடிக்கையானது சர்வதேச சிறந்த நடைமுறைகள், கட்டமைப்புகள் ஆகியவற்றை நீதித் துறைக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவி செய்கிறது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வர்த்தக மத்தியஸ்தத்தை மேற்கொள்ளவிருக்கும் இலங்கை நிறுவனங்கள் | Tamil Leader | We Lead the Nation