Tamil Leader News
முக்கியம்
KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●
செய்திகள்

ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

T

The Leader Desk

ஜூலை 19, 2023 • 10:46 AM

ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
  • நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 24 இலட்சம் மெற்றிக் தொன் எனவும் கடந்த பருவகால அறுவடையின் மூலம் 27 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
  • பாசிப்பயறின் ஆண்டுத் தேவை 20,000 மெட்ரிக் தொன், என்பதுடன் இந்த ஆண்டு 13,439 மெட்ரிக் தொன் பாசிப்பயறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், கௌபியின் வருடாந்தர தேவை 15,000 மெற்றிக் தொன் என்பதுடன் இந்நாட்டின் கௌபி உற்பத்தி 13,740 மெற்றிக் தொன் ஆகும்.
எழுத்து அளவு:

தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் விவசாயிகளுக்கு இரசாயன உரங்களை வழங்கும் நடவடிக்கையின் மூலம் நாடு தற்போது நெல் மற்றும் ஏனைய உணவுப் பயிர்களில் தன்னிறைவு நிலையை அடைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் வருடாந்த அரிசித் தேவை 24 இலட்சம் மெற்றிக் தொன் எனவும் கடந்த பருவகால அறுவடையின் மூலம் 27 இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை உற்பத்தி செய்ய முடிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

பாசிப்பயறின் ஆண்டுத் தேவை 20,000 மெட்ரிக் தொன், என்பதுடன் இந்த ஆண்டு 13,439 மெட்ரிக் தொன் பாசிப்பயறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கௌபியின் வருடாந்தர தேவை 15,000 மெற்றிக் தொன் என்பதுடன் இந்நாட்டின் கௌபி உற்பத்தி 13,740 மெற்றிக் தொன் ஆகும்.

இந்நாட்டின் வருடாந்த உழுந்து தேவை 20,000 மெற்றிக் தொன் என்றாலும், இவ்வருடம் 17,866 மெற்றிக் தொன் உழுந்து அறுவடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலக்கடலையின் வருடாந்தத் தேவை 35,000 மெட்ரிக் தொன் எனவும், இந்த ஆண்டு 36,498 மெட்ரிக் தொன் நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இந்நாட்டின் வருடாந்தத் குரக்கன்  தேவை 10,000 மெற்றிக் தொன் எனவும் இவ்வருடத்தில் அதன் அறுவடை 6408 மெற்றிக் தொன் எனவும் கூறப்படுகிறது.

இதன்படி, நாடு தற்போது அரிசி,  பாசிப்பயறு, குரக்கன், கௌபி, உளுந்து, நிலக்கடலை போன்றவற்றில் தன்னிறைவு அடைந்துள்ளதால், இவ்வருடம் மீண்டும் அந்த பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Tamil Leader | We Lead the Nation